கண்டுநின்ற மாயையும் கலந்துநின்ற பூதமும் உண்டுறங்கு மாறுநீர் உணர்ந்திருக்க வல்லிரேல் பண்டைஆறும் ஒன்றுமாய்ப் பயந்தவேத சுத்தராய் அண்டமுத்தி ஆகிநின்ற வாதிமூலம் ஆவிரே. | 67 |
| | |
ஈன்றவாச லுக்குஇரங்கி எண்ணிறந்து போவிர்காள் கான்றவாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர் நான்றவாச லைத்திறந்து நாடிநோக்க வல்லிரேல் தோன்றுமாயை விட்டொழிந்து சோதிவந்து தோன்றுமே. | 68 |
| | |
உழலும்வாச லுக்குஇரங்கி ஊசலாடும் ஊமைகாள் உழலும்வாச லைத்துறந்து உண்மைசேர எண்ணிலிர் உழலும் வாச லைத்துறந்து உண்மைநீர் உணர்ந்தபின் உழலும்வாசல் உள்ளிருந்த உண்மைதானும் ஆவிரே. | 69 |
| | |
மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை நாலுநாழி உம்முளே நாடியே யிருந்தபின் பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம் ஆலமுண்ட கண்டராணை அம்மைஆணை உண்மையே. | 70 |
| | |
இருக்கவேணும் என்றபோ திருக்கலாய் இருக்குமோ மரிக்கவேணும் என்றலோ மண்ணுளே படைத்தனர் சுருக்கமற்ற தம்பிரான் சொன்ன அஞ் செழுத்தையும் மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தென்ப பதங்கெடீர். | 71 |
| | |
அம்பத்தொன்றில் அக்கரம் அடங்கலோர் எழுத்துமோ விண்பரந்த மந்திரம் வேதநான்கும் ஒன்றலோ விண்பரந்த மூலஅஞ் செழுத்துளே முளைத்ததே அங்கலிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே. | 72 |
| | |
சிவாயம் என்ற அக்ஷரஞ் சிவனிருக்கும் அக்ஷரம் உபாயமென்று நம்புவதற்கு உண்மையான அக்ஷரம் கபாடம்அற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை உபாயம்இட் டழைக்குமே சிவாயஅஞ் செழுத்துமே. | 73 |
| | |
உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல மருவுமல்ல சொந்தமல்ல மற்றதல்ல அற்றதல்ல | |