பெரியதல்ல சிறியதல்ல பேசலான தானுமல்ல உரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே. | 74 |
| | |
ஆத்துமா வனாதியோ ஆத்துமா அனாதியோ மீத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ தாக்கமிக்க நூல்களும் சதாசிவமும் அனாதியோ வீக்கவந்த யோகிகாள் விரைந்துரைக்க வேணுமே. | 75 |
| | |
அறிவிலே பிறந்திருந் தஆகமங்க ள்ஓதுறீர் நெறியிலே மயங்குகின்ற நேர்மையொன் றறிகிலீர் உறியிலே தயிரிருக்க ஊர்புகுந்து வெண்ணைய் தேடும் அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே. | 76 |
| | |
இருவரங்க மும்பொருந்தி என்புருகி நோக்கிலீர் உருவரங்க மாகிநின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர் கருவரங்க மாகிநின்ற கற்பனை கடந்தபின் திருவரங்க மென்றுநீர் தெளிந்திருக்க வல்லிரே. | 77 |
| | |
கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர் குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள் திருத்துருத்தி மெய்யினாற் சிவந்தஅஞ் செழுத்தையும் உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே. | 78 |
| | |
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும் எண்ணிலாத கோடிதேவரென்ன துன்னதென்னவும் கண்ணிலே கண்மணிஇருக்கக் கண்மறைந்த வாறுபோல் எண்ணில் கோடி தேவரும் இதின்கணால் விழிப்பதே. | 79 |
| | |
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார் வெண்கலம் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார் நண்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் எண்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே. | 80 |
| | |
மிக்கசெல்வம் நீர் படைத்த விறகுமேவிப் பாவிகாள் விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவது அறிகிலீர் மக்கள் பெண்டீர்சுற்ற மென்று மாயைகாணும் இவையெல்லாம் மறலிவந் தழைத்தபோது வந்துகூட லாகுமோ. | 81 |