அந்தவிடம் அத்தனையும் அருளாய் இருந்துதடி சொந்தம் இடமெல்லாம் - என் ஆத்தாளே சுகமாய் மணக்குதடி. | 162 |
| | |
இந்தமணம் எங்கும் இயற்கைமணம் என்றறிந்து அந்தச் சுகாதீதம் - என் ஆத்தாளே அருட்கடலில் மூழ்கினன்டி. | 163 |
| | |
அத்திமதிசூடும் ஆனந்தப் பேரொளிதான் சத்திசிவம் என்றறிந்தே - என் ஆத்தாளே சச்சுபலங் கொண்டான்டி. | 164 |
| | |
உள்ளத்தொளி யாகவடி ஓங்காரத்து உள்ளிருக்கும் கள்ளப் புலன் அறுக்க - என் ஆத்தாளே காரணமாய் வந்தான்டி. | 165 |
| | |
கணக்கனார் வாசலது கதவுதான் தாள்திறந்து பிணக்காத பிள்ளையென்று - என் ஆத்தாளே பீடமிடம் பெற்றேன்டி. | 166 |
| | |
மூன்று சுழிவழியே முன்னங்கால் தான்மடித்து ஈன்று சுழிவழியே - என் ஆத்தாளே இசைந்திருந்த மந்திரமும். | 167 |
| | |
தோன்றாது தோன்றுமடி சுகதுக்கம் அற்றிடத்தே மூன்றுவழி போகவடி - என் ஆத்தாளே முதியமன ஆச்சுதடி. | 168 |
| | |
சுத்த மத்தமற்றே தொண்டராய்த் தொண்டருடன் அத்திவித்தின் போலே - என் ஆத்தாளே அதிகம் அளித்தேன்டி. | 169 |
| | |
வித்துருவத் தோடே விநாயகனைத் தாள்தொழுது அத்துருவம் நீக்கிபடி - என் ஆத்தாளே அறிய அளித்தேன்டி. | 170 |
| | |
மின்னார் விளக்கொளிபோல் மேவுமிதே யாமாகில் என்னாலே சொல்லவென்றால் - என் ஆத்தாளே எழும்புதில்லை என் நாவு. | 171 |