பக்கம் எண் :

348சித்தர் பாடல்கள்



6.

விஷ்ணு துதி

ஆண்டிப்பெண் ணாம்ராச பாண்டிப்பெண் ணாம்வாலை
     அம்பிகை மேற்கும்மி பாடுதற்குக்
காண்டீப னாம்பணி பூண்டவன் வைகுந்தம்
     ஆண்டவன் பொற்பதங் காப்பாமே.

  


7.

நந்தீசர் துதி

அந்தரி சுந்தரி வாலைப்பெண் ணாமந்த
     அம்பிகை மேற்கும்மி பாடுதற்குச்
சிந்தையில் முந்திநல் விந்தையாய் வந்திடும்
     நந்தீசர் பொற்பதங் காப்பாமே.

  


8.

நூல்

தில்லையில் முல்லையி லெல்லையு ளாடிய
     வல்லவள் வாலைப் பெண் மீதினிலே
சல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும்
     தொல்லை வினை போக்கும் வாலைப் பெண்ணே!

  
9.மாதா பிதாகூட இல்லாம லேவெளி
     மண்ணும் விண்ணுமுண்டு பண்ணவென்று
பேதைப்பெண் ணாமுதல் வாலைப்பெண் ணாளென்று
     புகுந்தா ளிந்தப் புவியடக்கம்
  
10.வேதமும் பூதமுண் டானது வும்வெளி
     விஞ்ஞான சாத்திர மானதுவும்
நாதமுங் கீதமுண் டானது வும்வழி
     நான் சொல்லக் கேளடி வாலைப் பெண்ணே!
  
11.முந்தச் செகங்களுண் டானது வும்முதல்
     தெய்வமுந் தேவருண் டானதுவும்
விந்தையாய் வாலையுண் டானது வும்ஞான
     விளக்கம் பாரடி வாலைப் பெண்ணே!
  
12.அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும்
     அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம்