| தரிக்கும் முந்தின தஞ்செழுத்தாம் வாசி பரிக்குள் நின்றது மஞ்செழுத்தாம். |
| |
13. | ஆதியி லைத்தெழுத் தாயினாள் வாலைப்பெண் ஐந்தெழுத் துமென்று பேரானாள் நாதியி னூமை யெழுத்திவள் தானல்ல ஞான வகையிவள் தானானாள். |
| |
14. | ஊமை யெழுத்தே யுடலாச்சு மற்றும் ஓமென் றெழுத்தே யுயிராச்சு ஆமிந் தெழுத்தை யறிந்துகொண் டுவிளை யாடிக் கும்மி யடியுங்கடி. |
| |
15. | செகம்ப டைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும் சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம் உகமு டிந்தது மஞ்செழுத் தாம்பின்னும் உற்பன மானது மஞ்செழுத்தாம். |
| |
16. | சாத்திரம் பார்த்தாலுந் தானுமென்ன வேதந் தானுமே பார்த்திருந் தாலுமென்ன? சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு சொல்லை யறிந்தல்லோ காணவேணும் |
| |
17. | காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில் காரிய மில்லையென் றேநினைத்தால் காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில் காரிய முண்டு தியானஞ் செய்தால். |
| |
18. | ஆயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயறி வாயனு மைந்தா மெழுத்துக்குள்ளே வாயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயிந்த வாலையு மைந்தா மெழுத்துக்குள்ளே. |
| |
19. | அஞ்செழுத் தானதும் எட்டெழுத் தாம்பின்னும் ஐம்பத்தோர் அட்சரந் தானாச்சு நெஞ்செழுத் தாலே நினையா மலந்த நிசந்தெ ரியுமோ வாலைப் பெண்ணே |