20. | ஏய்க்கு தேய்க்கு தஞ்செழுத் துவகை எட்டிப் பிடித்துக் கொளிரண்டெழுத்தை நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி நிலையைப் பாரடி வாலைப் பெண்ணே! |
| |
21. | சிதம்பர சக்கரந் தானறி வாரிந்தச் சீமையி லுள்ள பெரியோர்கள் சிதம்பர சக்கர மென்றால் அதற்குள்ளே தெய்வத்தை யல்லோ அறியவேணும். |
| |
22. | மனமு மதியு மில்லாவி டில்வழி மாறுதல் சொல்லியே யென்ன செய்வாள் மனமு றுதியும் வைக்கவே ணும் பின்னும் வாலை கிருபையுண் டாகவேணும். |
| |
23. | இனிவெ ளியினிற் சொல்லா தேயெழில் தீமட்டு திந்த வரி விழிக்கே கனிமொ ழிச்சியீர் வாருங்கடி கொஞ்சங் கருவைச் சொல்லுவேன் கேளுங்கடி. |
| |
24. | ஊத்தைச் சடலமென் றெண்ணா தேயிதை உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே; பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப் பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே. |
| |
25. | உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம் வைத்த விளக்கும் எரியுதடி; அச்சுள்ள விளக்கு வாலையடிஅவி யாம லெரியுது வாலைப் பெண்ணே! |
| |
26. | எரியு தேஅறு வீட்டினி லேயதில் எண்ணெயில் லையமிழ் தண்ணீரில்லை; தெரியுது போக வழியுமில் லைபாதை சிக்குது சிக்குது வாலைப் பெண்ணே! |
| |
27. | சிலம்பொ லியென்னக் கேட்டுமடிமெத்த சிக்குள்ள பாதை துடுக்கமடி; |