| வலம்புரி யச்சங்க மூது மடிமேலே வாசியைப் பாரடி வாலைப் பெண்ணே! |
| |
28. | வாசிப் பழக்க மறியவே ணுமற்று மண்டல வீடுகள் கட்டவேணும்; நாசி வழிக்கொண்டு யோகமம் வாசியும் நாட்டத்தைப் பாரடி வாலைப் பெண்ணே! |
| |
29. | முச்சுட ரான விளக்கினுள் ளேமூல மண்டல வாசி வழக்கத்திலே எச்சுடராகி யந்தச் சுடர்வாலை இவள் விட வேறில்லை வாலைப் பெண்ணே! |
| |
30. | சூடாமல் வாலை யிருக்கிற தும்பரி சித்த சிவனுக்குள் ளானதால் வீடாமல் வாசிப் பழக்கத்தைப் பாருநாம் மேல்வீடு காணலாம் வாலைப் பெண்ணே! |
| |
31. | மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில் விளக்கில் நின்றவன் வாணியடி தாய்வீடு கண்டவன் ஞானியடிபரி தாண்டிக் கொண்டான்பட் டாணியடி. |
| |
32. | அத்தியி லேகரம் பத்தியி லேமனம் புத்தியி லேநடு மத்தியிலே நெற்றி சதாசிவ மென்றுசொன் னேனுன்றன் நிலைமையைப் பாரடி வாலைப் பெண்ணே! |
| |
33. | அழுத்தி லேசொல்லஞ் செழுத்தி லேநானும் வழுத்தி னேன்ஞானப் பழத்திலே கழுத்தி லேமயேஸ் வரனு முண்டுகண் கண்டு பாரடி வாலைப் பெண்ணே! |
| |
34. | அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சிய ரேநிதம் கொஞ்சி விளையாடும் வஞ்சியரே! நெஞ்சிலே ருத்திரன் சூழிருப் பானவன் நேருட னாமடி வாலைப் பெண்ணே! |