பக்கம் எண் :

352சித்தர் பாடல்கள்

35.தொந்தியி லேநடுப் பந்தியி லேதிடச்
     சிந்தையிலே முந்தி யுன்றனுடன்
உந்தியில் விண்ணுவுந் தாமிருப் பாரிதை
     உண்மையாய்ப் பாரடி வாலைப் பெண்ணே!
  
36.ஆலத்தி லேயிந்த ஞாலத்தி லேவருங்
     காலத்தி லேயனு கூலத்திலே
மூலத்தி லேப்ரமன் தானிருந் துவாசி
     முடுக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே.
  
37.தேருமுண்டு ஐந்நூறும் ஆணியுண் டேஅதில்
     தேவரு முண்டுசங் கீதமுண்டே
ஆருண்டு பாரடி வாலைத் தெய் வம்மதில்
     அடக்கந் தானடி வாலைப் பெண்ணே!
  
38.ஒன்பது வாயில்கொள் கோட்டையுண் டேஅதில்
     உள்ளே நிலைக்கார ரஞ்சுபேராம்;
அன்புட னேபரி காரர்க ளாறுபேர்
     அடக்கந் தானடி வாலைப் பெண்ணே!
  
39.இந்த விதத்திலே தேகத்தி லேதெய்வம்
     இருக்கையில் புத்திக்க றிக்கையினால்
சந்தோட வாலையைப் பாராமல் மனிதர்
     சாகிறதேதடி வாலைப் பெண்ணே!
  
40.நகார திட்டிப்பே ஆன தினால் வீடு
     வான வகார நயமாச்சு;
உகார முச்சி சிரசாச் சேஇதை
     உற்றுப் பாரடி வாலைப் பெண்ணே!
  
41.வகார மானதே ஓசையாச் சேஅந்த
     மகார மானது கர்ப்பமாச்சே;
சிகார மானது மாய்கையாச் சேஇதைத்
     தெளிந்து பாரடி வாலைப் பெண்ணே!
  
42.ஓமென்ற அட்சரந் தானுமுண் டதற்குள்
     ஊமை யெழுத்து மிருக்குதடி;