| நாமிந்தெ ழுத்தை யறிந்து கொண் டோம்வினை நாடிப் பாரடி வாலைப் பெண்ணே! |
| |
43. | கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை வெட்டவே ணும்வாசி யொட்டவேணும் எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காய மென்றைக்கி ருக்குமோ வாலைப் பெண்ணே! |
| |
44. | இருந்த மார்க்கமாய்த் தானிருந்து வாசி ஏற்காம லேதான டக்கவேணும்; திரிந்தே ஓடி யலைந்துவெந் துதேகம் இறந்து போச்சுதே வாலைப் பெண்ணே! |
| |
45. | பூத்த மலராலே பிஞ்சுமுண்டே அதில் பூவில்லாப் பிஞ்சும் அனேகமுண்டு மூத்த மகனாலே வாழ்வுமுண் டுமற்ற மூன்றுபே ராலே அழிவுமுண்டு! |
| |
46. | கற்புள்ள மாதர் குலம் வாழ்க நின்ற கற்பை யளித்தவ ரேவாழ்க! சிற்பர னைப்போற்றிக் கும்மிய டிகுரு தற்பர னைப்போற்றிக் கும்மியடி. |
| |
47. | அஞ்சி னிலேரண்டழிந்ததில் லையஞ் சாறிலே யுநாலொ ழிந்ததில்லை; பிஞ்சிலே பூவிலே துஞ்சுவ தாம்அது பேணிப் போடலாம் வாலைப் பெண்ணே! |
| |
48. | கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட் டானிரு காலில்லா நெட்டையன் முட்டிக் கிட்டான்; ஈயில்லாத் தேனெடுத் துண்டுவிட் டானது இனிக்கு தில்லையே வாலைப்பெண்ணே! |
| |
49. | மேலூரு கோட்டைக்கே ஆதர வாய்நன்றாய் விளங்கு கன்னனூர்ப் பாதையிலே காலூரு வம்பலம் விட்டத னாலது கடுந டையடி வாலைப் பெண்ணே! |