| 50. | தொண்டையுள் முக்கோணக் கோட்டையி லேயிதில் தொத்திக் கொடிமரம் நாட்டையிலே சண்டைசெய் துவந்தே ஓடிப்போ னாள்கோட்டை வெந்து தணலாச்சு வாலைப் பெண்ணே! |
| | |
| 51. | ஆசை வலைக்குள் அகப்பட்ட தும்வீட அப்போதே வெந்தே அழிந்திட்டதும் பாச வலைவந்து மூடிய தும்வாலை பாதத்தைப் போற்றடி வாலைப் பெண்ணே! |
| | |
| 52. | அன்ன மிருக்குது மண்டபத் தில்விளை யாடித் திரிந்ததே ஆண்புலியும் இன்ன மிருக்குமே யஞ்சுகி ளியவை எட்டிப் பிடிக்குமே மூன்று கிளி; |
| | |
| 53. | தோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது மாப்பிள்ளை தான் வந்து சாப்பிடவும் ஏய்க்கு மிப்படி யஞ்சா றாந்தை இருந்து விழிப்பது பாருங்கடி. |
| | |
| 54. | மீனு மிருக்குது தூரணி யிலிதை மேய்ந்து திரியுங் கலசா வல்; தேனு மிருக்குது போரையிலே யுண்ணத் தெவிட்டு தில்லையே வாலைப் பெண்ணே! |
| | |
| 55. | காகமிருக்குது கொம்பிலே தான்கத சாவ லிருக்குது தெம்பிலேதான்; பார்க்க வெகுதூர மில்லை யிதுஞானம் பார்த்ததால் தெரியுமே வாலைப் பெண்ணே! |
| | |
| 56. | கும்பிக் குளத்திலே யம்பல மாமந்தக் குளக்க ருவூரில் சேறு மெத்த; தெம்பி லிடைக்காட்டுப் பாதைக ளாய் வந்து சேர்ந் தாராய்ந்துபார் வாலைப் பெண்ணே! |
| | |
| 57. | பண்டுமே ஆழக் கிணற்றுக்குள் ளேரண்டு கெண்டை யிருந்து பகட்டுதடி; |