அடிக்கடி கயிலையங்கிரி சென்று சிவபிரானுடன் நட்புப் பூண்டிருந்தார். எனவே அங்குள்ள குளிரைத் தாங்கக் கம்பளிச் சட்டை அணிந்து கொண்டிருந்தார் என அகத்தியர் தம் பெருநூல் காவியத்தில் தெரிவிக்கிறார். சட்டை முனி ஸ்ரீரங்கத்தில் ஜீவ சமாதி அடைந்ததாக வைணவர்கள் கூறுகின்றனர். சைவர்கள் இவர் சீர்காழியில் ஜீவ சமாதி அடைந்ததாகக் கூறுகின்றனர். இதனை போகர் ஜனன சாகரம் கூறுகிறது. 1. | பூசை செய்யும் முறை எண்சீர் விருத்தம் காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்; கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார் பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப் புகழாகப் பூசைசெய்வார் பெண்ணை வைத்தும்; நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார் நம்முடைய பூசையென்ன மேருப் போலே ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே உத்தமனே! பூசைசெய்வார் சித்தர் தானே. | | | | | 2. | தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார் சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்; தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும்; சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா; வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர் வாய்திறந்தே உபதேசம் சொன்னா ராகிற் கோனென்ற வாதசித்தி கவன சித்தி கொள்ளையிட்டான் அவன்சீடன் கூறி னானே. | | | | | 3. | கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய்; குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய்; மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்; | |