திண்ணுங்கா யிலைமருந்து மதுவே யாகும் தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார் மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு மறலிகையில் அகப்படவு மாட்டார் தாமே. | 2 |
| | |
தனி ஞானம் ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று உமையவளுங் கணபதியு முந்தி யாகி விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும் விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா! பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு; கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால் கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே; | 3 |
| | |
விந்துநிலை தனையறிந்து விந்தைக் கண்டால் விதமான நாதமது குருவாய்ப் போகும் அந்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால் ஆதியந்த மானகுரு நீயே யாவாய் சந்தேக மில்லையடா புலத்தி யனே சகலகலை ஞானமெல்லா மிதற்கொவ் வாவே; முந்தாநாள் இருவருமே கூடிச் சேர்ந்த மூலமதை யறியாட்டால் மூலம் பாரே. | 4 |
| | |
மூலமதை யறிந்தக்கால் யோக மாச்சு முறைமையுடன் கண்டக் கால் வாதமாச்சு; சாலமுடன் கண்டவர்முன் வசமாய் நிற்பார் சாத்திரத்தைச் சுட்டெறிந்தாலவனே சித்தன்; சீலமுள்ள புலத்தியனே! பரம யோகி செப்புமொழி தவறாமல் உப்பைக் கண்டால் ஞானமுள்ள எந்திரமாஞ் சோதி தன்னை நாட்டினால் சகலசித்தும் நல்கும் முற்றே. | 5 |