ஞானம் - 3 பாரப்பா சீவன்விட்டுப் போகும் போது பாழ்த்தபிணங் கிடக்கு தென்பார்; உயிர்போச் சென்பார்; ஆரப்பா அறிந்தவர்கள்? ஆரும் இல்லை ஆகாய சிவத்துடனே சேரு மென்பார்; காரப்பா தீயுடன் தீச் சேரு மென்பார் கருவறியா மானிடர்கள் கூட்ட மப்பா! சீரப்பா காமிகள்தா மொன்றாய்ச் சேர்ந்து தீயவழி தனைத்தேடிப் போவார் மாடே. | 1 |
| | |
மாடுதா னானாலும் ஒருபோக் குண்டு மனிதனுக்கோ அவ்வளவுந் தெரியா தப்பா! நாடுமெத்த நரகமென்பார்; சொர்க்க மென்பார் நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்; ஆடுகின்ற தேவதைகள் அப்பா! கேளு அரியதந்தை யினஞ்சேரு மென்றுந் தோணார்; சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா யெண்ணித் தளமான தீயில்விழத் தயங்கி னாரே; | 2 |
| | |
தயங்காமற் பிழைப்பதற்கே இந்த ஞானம் சார்வாகப் பாராட்டும் ஞானம் வேறே; மயங்குதற்கு ஞானம்பார் முன்னோர் கூடி மாட்டினார் கதைகாவ்ய புராண மென்றும் இயலான ரசந்தனிலீப் புகுந்தாற் போலும் இசைத்திட்டார் சாத்திரங்க ளாறென் றேதான்; வயலான பயன்பெறவே வியாசர் தாமும் மாட்டினார் சிவனாருத் தரவினாலே. | 3 |
| | |
உத்தார மிப்படியே புராணங் காட்டி உலகத்தில் பாரதம்போல் கதையுண் டாக்கிக்; கர்த்தாவைத் தானென்று தோண வொட்டாக் கபடநா டகமாக மேதஞ் சேர்த்துச் சத்தாக வழியாகச் சேர்ந்தோர்க் கெல்லாஞ் சதியுடனே வெகுதர்க்கம் பொருள்போற் பாடிப் | |