பக்கம் எண் :

372சித்தர் பாடல்கள்

பத்தாகச் சைவர்க்கொப் பனையும் பெய்து
     பாடினார் சாத்திரத்தைப் பாடினாரே.
4
  
பாடினதோர் வகையேது? சொல்லக் கேளு
     பாரதபு ராணமென்ற சோதி யப்பா!
நீடியதோர் ராவணன்தான் பிறக்க வென்றும்
     நிலையான தசரதன்கை வெல்ல வென்றும்
நீடியவோ ராசனென்றும் முனிவ ரென்றும்
     நிறையருள்பெற் றவரென்றுந் தேவ ரென்றும்
ஆடியதோர் அரக்கரென்றும் மனித ரென்றும்
     பாடினார் நாள்தோறும் பகையாய்த் தானே.
5
  
கழிந்திடுவார் பாவத்தா லென்று சொல்லும்
     கட்டியநால் வேதமறு சாத்தி ரங்கள்
அழிந்திடவே சொன்னதல்லால் வேறொன் றில்லை
     அதர்ம மென்றுந் தர்மமென்றும் இரண்டுண் டாக்கி
ஒழிந்திடுவா ரென்றுசொல்லிப் பிறப்புண் டென்றும்
     உத்தமனாய்ப் பிறப்பனென்று முலகத் தோர்கள்
தெளிந்திடுவோர் குருக்களென்றுஞ் சீட ரென்றும்
     சீவனத்துக் கங்கல்லோ தெளிந்து காணே!
6
  

ஞானம் - 4

எண்சீர் விருத்தம்

பூரணமே தெய்வமென உரைத்தா ரையா
     பூரணத்தை யின்ன தென்று புகல வேண்டும்
காரணத்தைச் சொல்லுகிறேன்; நினைவாய்க் கேளு
     கலையான பதினாறும் பூரணமே யாகும்.
மாரணமா முலகத்தில் மதிம யங்கி
     மதிகெட்டுப் பூரணத்தை யிகழ்ந்தா ரையா!
வாரணத்தை மனம்வைத்துப் பூரணத்தைக் காத்தால்
     வாசியென்ற சிவயோக வாழ்க்கை யாச்சே.

1
  
ஆச்சப்பா இந்த முறை பதினெண் பேரும்
     அயன்மாலும் அரனோடுந் தேவ ரெல்லாம்