கூடப்பா துரியமென்ற வாலை வீடு கூறரிய நாதர்மகேச் சுரியே யென்பார்; நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு; நந்திசொல்லுஞ் சிங்காரந் தோன்றுந் தோன்றும்; ஊடப்பா சிகாரவரை யெல்லாந் தோன்றும்; ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊற லாகும்; தேடப்பா இதுதேடு காரிய மாகும்; செகத்திலே இதுவல்லோ சித்தி யாமே. | 2 |
| | |
ஆமென்ற பூர்ணஞ்சுழி முனையிற் பாராய்; அழகான விந்துநிலை சந்த்ர னிற்பார் ஓமென்ற ரீங்காரம் புருவ மையம் உத்தமனே வில்லென்ற வீட்டிற் காணும்; வாமென்ற அவள்பாதம் பூசை பண்ணு; மற்றொன்றும் பூசையல்ல மகனே! சொன்னேன்; பாமென்ற பரமனல்லோ முதலெ ழுத்தாம்; பாடினேன் வேதாந்தம் பாடினேனே. | 3 |
| | |
பாடுகின்ற பொருளெல்லாம் பதியே யாகும்; பதியில்நிற்கும் அட்சரந்தான் அகார மாகும்; நாடுகின்ற பரமனதோங் கார மாகும்; நலம் பெரிய பசுதானே உகாரமாகும்; நீடுகின்ற சுழுமுனையே தாரை யாகும்; நின்றதோர் இடைகலையே நாதவிந்தாம்; ஊடுகின்ற ஓங்கார வித்தை யாகும் ஒளியான அரியெழுத்தை யூணிப் பாரே. | 4 |
| | |
ஊணியதோர் ஓங்காரம் மேலு முண்டே உத்தமனே சீருண்டே வூணிப்பாரே; ஆணியாம் நடுநாடி நடுவே மூட்டும் ஆச்சரிய வெழுத்தெல்லாம் அடங்கி நிற்கும் ஏணியா யிருக்குமடா அஞ்சு வீடே ஏகாந்த மாகியவவ் வெழுத்தைப் பாரு; தோணிபோற் காணுமடா அந்த வீடு; சொல்லாதே ஒருவருக்குந் துறந்திட்டேனே. | 5 |