மயிலாடு மேகமென்றும் நரக மென்றும் மாய்கையென்றும் மின்னலென்றும் மவுன மென்றும் துயிலான வாடையென்றும் சூட்ச மென்றும் சொல்லற்ற இடமென்றும் ஒடுக்கம் என்றும் தயிலான பாதமென்றும் அடி முடி என்றும் தாயான வத்துவென்றும் பதியின் பேரே. | 14 |
| | |
பேருசொன்னேன்; ஊர்சொன்னேன் இடமும் சொன்னேன்; பின்கலையும் முன்கலையும் ஒடுக்கம் சொன்னேன்; பாருலகிற் பல நூலின் மார்க்கஞ் சொன்னேன்; பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன்; சீருலகம் இன்னதென்று தெருட்டிச் சொன்னேன்; சித்தான சித்தெல்லாம் சுருக்கிச் சொன்னேன்; நேருசொன்னேன் வழிசொன்னேன் நிலையுஞ் சொன்னேன்; நின்னுடம்பை யின்னதென்று பிரித்துச் சொன்னேன்; | 15 |
| | |
பிரித்துரைத்தேன் சூத்திரமீ ரெட்டுக்குள்ளே பித்தர்களே! நன்றாகத் தெரிந்து பார்க்கில் விரித்துரைத்த நூலினது மார்க்கஞ் சொன்னேன்; விள்ளாதே இந்த நூலிருக்கு தென்று கருத்துடனே அறிந்துகொண்டு கலைமா றாதே காரியத்தை நினைவாலே கருத்திற் கொள்ளு; சுருதிசொன்ன செய்தியெல்லாம் சுருக்கிச் சொன்னேன்; சூத்திரம்போற் பதினாறும் தொடுத்தேன் முற்றே. | 16 |
| | |
ஞானம் - 5 கற்பமென்ன வெகுதூரம் போக வேண்டா! கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா; சர்ப்பமென்ன நாகமதோர் தலையில்நின்று சாகாத கால்கண்டு முனை யிலேறி நிற்பமென்று மனமுறுத்து மனத்தில்நின்று நிசமான கருநெல்லிச் சாற்றைக் காணு; சொற்பமென்று விட்டுவிட்டால் அலைந்து போவாய்; துரியமென்ற பராபரத்திற் சென்று கூடே. | 1 |