பாக்கிநின்ற இந்திரிய விடயத் துள்ளே பாழான மனஞ்சிக்கிப் படுகு வாரே. | 14 |
| |
வாரான வுலகத்தில் மனிதர் கோடி மருவிநின்றே யுண்டுடுத்துச் சையோ கித்துத் தாரான கசதுரக ரதங்க ளேறிச் சகலரத்ன பூடணங்கள் தரித்து விம்மி மாரான வாழ்வடைந்தோர் இறந்தா ரையா! மாண்டவர்கள் வெகுகோடி மாய வாழ்க்கை கூரான சிவபோக ஞானம் வந்தால் கூடழிந்து போகாது கூடு கூடே. | 15 |
| |
கூடுவதம் பரமோகே சரமோ வென்னில் கூர்மையுள்ள வானோவ தீதமோ வென்னில் ஆடுவதாச் சரியநின் மலமோ வென்னில் அருமையுள்ள நிர்க்குணமோ நிரஞ்சனமோ என்னில் பாடுவது பதங்கடந்த பூரணமோ வென்னில் பகலிரவு மற்றிடமோ பராபரமோ வென்னில் ஊடுவதெங் கேபின்னை யெங்கு மில்லை உம்மென்றா லூமவெள்ள மோகங் காணே. | 16 |
| |
மோகமென்ற வுரலுக்குள் மனந்தான் சிக்கி முசியாம லிடிப்பதற்கைம் பொறியுங் கோல்தான் பாகமென்ற கோபம் வந்தே யுருவாய் நின்று பதையாமற் சண்ணிச்சே யுலக மெல்லாந் தாகமென்ற ஞானம்வந் தென்ன செய்யும்? சண்டாள இந்திரியச் சார்பி னாலே வேகமென்ற மனலகரி யைத்தான் கொண்டு விண்ணுக்கு ளேநிற்க வெளியாய்ப் போமே. | 17 |
| |
வெளியேது வெளிக்குள்ளே வெளியங் கேது? வேதாந்த வெளிகடந்த வொளியங் கேது? அளியேதவ் வளிகடந்த அண்ட மேது? அப்புறத்தே தோற்றுகின்ற சோதி யேது? நெளியேது நினைவேதுநிர்க் குணந்தா னேது? நேரான பூரணத்தின் நாத மேது? | |