சுழியேது? சுழியடக்குஞ் சூட்ச மேது? தோற்றுமப்பா வானத்தை யொத்துப் பாரே. | 18 |
| |
ஒத்துநின்ற சரியையொடு கிரியை ரண்டும் உறவாதி செய்தவப்பா நன்றாய்க் கேளு; பத்திநின்ற யோகமுதல் ஞானம் ரண்டும் பாங்காகச் சித்தருக்கே அடுத்தவாறே அந்திநின்ற ஆகாம்யசஞ் சிதபிரா ரத்வம் ஆருக்கு மடுக்குமென்றால் யோக மெய்தி முத்திநின்ற ஞானத்திற் புகுந்தோர்க் கையா மூன்றுமிலை பிரபஞ்ச முழுதும் போச்சே. | 19 |
| |
போச்சென்பர் முக்காலம் பிறகே நின்று புரிமுருக்குப் போலேறிப் புணர்ந்து கொல்லும் ஆச்சப்பா காலமென்ன வென்று சொல்லி அவரவர்கள் சபஞ்செய்வா ரறிந்த மட்டும்; நீச்சப்பா அகாலவெள்ளம் கடப்பா ரென்றால் நேரான ஞானியல்லோ கடந்து நின்றார் மூச்சப்பா அற்றிடத்தைப் பாரு பாரு மூட்டுவிக்கு முகிடந்தான் ஞானத் தீயே. | 20 |
| |
தீக்குள்ளே வெந்துநின்ற பற்பம் போலச் செகசால முதற்கொண்டு காலம் போகும்; தீக்குள்ளே விழுந்தெழுந்த நெய்யைப் போலச் சிறப்பான ஞானமது திரண்டே யேறும்; தீக்குள்ளே காட்டமொடு கோலுங் கூடித் திரண்டாற்போற் கருவியெல்லாம் கணத்தில் மாளும்; தீக்குள்ளே பராபரந்தா னிருந்த தாயின் செகமெல்லாம் வித்தையென்று தெளிந்து போமே. | 21 |
| |
தெளிந்தவிடங் கண்டாரார் சித்தர் யோகி செகமெல்லாம் நரனென்பார் திருட்டுஞானம் ஒளிந்துவிட முனைந்ததால்கே சரிக்குள் நிற்பாள் உற்றுப்பார் மகாரம்வைத்தே யூகி யூதே அளிந்தவிடம் நிர்க்குணந்தா னதிலே கேளு; ஆச்சரிய மகாரமென்ற யுண்ட துண்டு; | |