களிந்தவிடம் நிராகார மொன்று மில்லைக் காட்டுந்தா ரறிவுகொண்டே யுற்றுக் காணே. | 22 |
| |
உற்றுநின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே ஊணுக்குக் கிடையாமல் புரட்டுப் பேசிப் பற்றுகின்ற மோகத்தாற் பெண்ணைக் கூடிப் பரந்துநின்ற திரோதாயி தலையிற் சிக்கிக் கொத்துகின்ற விடங்காண்பார் கண்ணை மூடிக் கும்மென்றே யிருளாகு மறிவும் பொய்யாம் மற்றுநின்ற லகரியினால் கொண்டே யேற மாட்டார்கள் அறுசமய மாடு தானே. | 23 |
| |
சமயமெல்லாஞ் சக்தியுண்டு சிவமு முண்டு; சண்டாளர் பிரித்தல்லோ தள்ளி னார்கள்; சமயமெல்லாம் வேதாந்தசித் தாந்த முண்டு சாதகத்தைப் பாராமற் றயங்கி னார்கள்; சமயமெல்லாம் நாதமுண்டு விந்து முண்டு; காக்காமற் கொட்டார்க ளுலகத் தோர்கள்; சமயமெல்லாம் அம்பரமாம் ஞான முண்டு தாயைவிட்ட பாவத்தால் தவறிப் போச்சே. | 24 |
| |
போச்சப்பா ஆறாறும் பானத் தாலே புத்தியுள்ளோர் பானத்தாற் கண்டா ரையா! ஆச்சப்பா வாமமென்ன நிசித மென்பார் அதன் குணமோ திரோதாயி யனுட்டா னந்தான்! ஓச்சப்பா நாதாக்கள் ரிடிகள் சித்தர் உயர்ந்தவரைக் கண்டவர்பா னத்தா லன்றோ? காய்ச்சமரம் பட்டதென்ன வேரற் றாற்போல் கசடரென்ற அறுசமயங் கேட்டே பாங்கே. | 25 |
| |
பாங்கான குண்டலிக்குள் மூல மொன்று; பாரப்பா கண்டத்தில் மூல மொன்று போங்கான புருவமைய மூல மொன்று; புகழான விந்துவிலே மூல மொன்று வாங்கான சத்தியிலே மூல மொன்று மருவிநின்ற பராபரத்தில் மூல மொன்று | |