தேங்காம லிவையாறுங் கண்ட ஞானி சேர்ந்துநின்ற மும்மூல யோகி யாமே. | 26 |
| |
ஆமப்பா நகாரமுதல் யகாரம் நிற்கும் அவ்வளவும் யோகத்தின் மூல மாச்சு; தாமப்பா அகாரமுதல் உகாரந் தொட்டுச் சாதகமாய் மகாரவரை ஞான மூலம் ஓமப்பா திசைநாத மவுனத்திற் காணும் உற்றேற வுற்றேற அகண்ட வீதி காமப்பா லுண்டக்கால் யோக சித்தி கடுங்கானற் பாலுண்ட ஞான மாச்சே. | 27 |
| |
ஆச்சிந்த வரிசைவிட்டே யுலக ஆசான் ஆதிஅந்த மொன்றுரவி மதிதா னென்பான்; மூச்சற்ற விடங்காட்டத் தெரியா நின்று முன்னேது பின்னேது சாங்க மென்பான்; வாச்சிந்த மயக்கத்தா லுலகோர் கேட்டார் மதுவைவிட்டே றியல்லோசை யத்தோர் கேட்டார் ஓச்சிந்த விதமறிந்தோன் யோக ஞானி உம்மென்று ஆகுமென்ற நாத மாமே. | 28 |
| |
நாதமப்பா யோகத்தி லைந்து நாதம் நலமான மவுனத்தி லைந்து நாதம் வேதமப்பா கடந்திடத்தே சுத்த நாதம் வெட்டவெளிக் குள்ளே யொரு நாதமுண்டு போதமப்பா கடந்திடத்தே யந்த நாதம் புகழாகச் சேவித்து நிற்கு மென்றும் காதமப்பா தூரமல்ல அந்தோ அந்தோ! கண்ணிமைக்குள் விண்ணுக்குள் கலந்துகாணே. | 29 |
| |
விண்ணேது வெளியேது வொளியங் கேது? விரைந்திந்த மூன்றுங்கே சரிதா னாச்சு; கண்ணேது காதேது மூக்கங் கேது? கண்டிப்பாய்க் கண்டவெல்லாம் அழிந்து போச்சே ஒண்ணிரண் டேதுசம ரசந்தா னேது உற்றுப்பார் வெட்டவெளி யொன்றுமில்லை; | |