மாட்டையிலே யறிவோடு மனத்தை மாட்டும் மறுகாலும் நாதத்தைக் கூர்ந்து கேளே ஓட்டையிலே யொருவழியா யோடிற் றானால் உத்தமனே யச்சின்ன முத்தி யையா! | 42 |
| | |
ஏறுகிற துறை ஐயனே! குருவான அகண்ட மூர்த்தி! அதிதமென்ற ஞானமெல்லாம் அருளிச் செய்தாய்; மெய்யனே! ஏறுகிற சாதகஞ் சொல் வேதாந்த லட்சியத்தை விளங்கச் சொல்லு துய்யனே! நிலைதோறு மெழுத்தைச் சொல்லு சொற்பெரிய பிராணாய சூட்சஞ் சொல்லு தையனே! தையமென்ற நிர்த்தஞ் சொல்லு சாதகமாய் லட்சயத்தைச் சாற்றி டாயே. | 43 |
| | |
சாற்றிடென்று கேட்டமா ணாக்க னேகேள்; சந்தோட மாச்சுதிப்போ சார்பு சொல்வேன்; ஏற்றமென்ற மூலத்தில் வாசி வைத்தே எளிதாகப் பிராணாயம் பண்ணித் தேறி ஆற்றுமென்ற குண்டலிக்குள் நடனங் கண்டால் ஆதித்தன் கோடியைப்போல் காந்தி காணும் மாற்றுமென்ற கண்டத்தி லங்கென் றூணு வாய்திறக்க வொட்டாது வழிசெய் வாயே. | 44 |
| | |
வழியோடே நின்றுரைத்துப் பழக்க மாகி மனோன் மணியாம் புருவமையத் தூடேசென்றே ஒளியோடே மவுனத்தை யோட்டி யூதாய்; உத்தமனே! சாம்பவியைக் கண்டு கொள்வாய் நெளிவோபோ யிவ்வளவும் யோக மார்க்கம் நின்றவனே சிவயோகி நினைவாய்க் கேளு; தெளிவோடே விந்துவென்ற குரு பதத்தில் தேக்கப்பா மவுனத்தைத் தாரை யாமே. | 45 |
| | |
ஆமப்பா விந்துரவி மதியோர் கூடி ஆச்சரியங் கண்கூசி மயக்க மாகி | |