தோணப்பா தோற்றுவதங் கொன்று மில்லை சுத்தவெளி ரவிகோடி சூழவன்னி ஆணப்பா மாகோடி கண்கொள் ளாதே ஆச்சரிய மதிகமென்ற மகாரங் காணே. | 38 |
| | |
மகாரமல் லோமுந்தி யாசான் சுட்டி வழிகாட்டு முறைமையது ஞான மார்க்கம் மகாரமல்லோ அடங்கியந்த நாதந் தாண்டி மருவிநின்ற இடமல்லோ கேசரி மைந்தா மகாரமென்ன மெலெழுத்தே யென்பார் மாண்பார் மாட்டுவதை முன்றெழுத்த தென்று காணார் மகாரமென்ன மகாரவித்தை யதீத வித்தை வாய்திறந்து பேசாதே மௌன மாமே. | 39 |
| | |
மௌனவித்தை யாதெனில்மூன் றெழுத்தே யென்பார் மாட்டுகிற இனங்காணார் மார்க்கங் காணார் மௌனவித்தை யாவதென் வாய்மூட வென்பார் மாடுமுதற் குதிரையினா லாவ தென்ன? மௌனவித்தை கேட்டார்கூட் டுறவு காணார் வாய்மூடி வழியோடே நாதங் கேளார் மௌனவித்தை யாசான்றான் தூண்டிக் காட்டில் மணிமுதலாய்த் திசைநாதங் கேட்குந் தானே. | 40 |
| | |
கேட்கையிலே மதியினிட மமிர்தஞ் சிந்துங் கெடியான துவாசமுர்தங் கடந்து தோன்றும் வாழ்க்கையிலே யாசையறும் நினைவும் போகும் வாரிதிபோ லண்ணாக்கி லமிர்த மோடும் தாக்கையிலே ரவிகோடி காந்தி காணும் சச்சிதா னந்தவொளி தானே தோன்றும் மூட்கையிலே மேலமிர்த லகரி மீறும் மூன்றுகமும் கணமாகு மூட்டிப் பாரே. | 41 |
| | |
மூட்டையிலே யுலககிரி கொண்டு மூட்டு முதிர்ந்தபின்பு விண்ணுள்கிரி வந்து காக்கும் கூட்டையிலே மகாரத்தை யறிந்து கூட்டும் கும்மென்ற நாதத்தில் கூடி யேறும் | |