பரிந்திந்த விந்துமுதல் நாதஞ் சித்தி பாங்கான சிவத்தோடு பரந்தான் கேளு; அறிந்திந்தப் பராபரத்தோ டாறுகேளு அப்பனே மவுனத்தைத் தூக்கிக் கொண்டால் செறிந்து நின்ற ஞானத்தின் யோக மாச்சு; செயல்தம்ப மவுனத்தைச் சென்று காணே. | 70 |
| | |
காணப்பா பராபரத்தின் மேலே யாறு கைவிட்ட அகண்ட முநிர்க் குணத்தா னொன்று பூணப்பா நிர்க்குணந்தான் நிராகா ரந்தான் புகழான நிர்மலந்தான் போதத் தந்தம் தோணப்பா விவையாறுங் காணப் போகச் சொல்லுகிற வார்த்தையென்றால் கேட்டி ருப்போம் ஊணப்பா சடம்விட்டே அறிவு விட்டே உற்று நின்ற அண்டத்தே யறித்து கொள்ளே. | 71 |
| | |
அறிந்து கொள்ளு மதியளவு பிண்டத் துள்ளே அப்பனே யாறுதலம் அறிந்து காணும்; அறிந்து கொள்ளு விந்துவின்மேல் பரத்தின் மட்டும் அறிவுக்குள் சக்கரந்தா னப்பா கேளு; அறிந்து கொள்ளு பரத்தின் மேல் போத மட்டும் ஆதார நிர்மலத்தின் வரைக ளாறும் அறிந்துகொள்ளு மேலாறுங் காணப் போகா ஆச்சரியம் கொங்கணரை விட்டுக் காணே. | 72 |
| | |
காணப்பா தசதீட்சை கடந்த பின்பு கைவிட்ட சூத்திரத்தை யாசான் காட்ட ஊணப்பா அது மவுனம் மற்ற தெல்லாம் உரவார்த்தை அகாரமுத லுகாரமென்பார் வீணப்பா சிரமேல்வே தாந்தக் காட்சி விரைந்ததிலே யும்மென்றே ஊணென் பார்கள் பூணப்பா வும்மென்ற நாத மாமோ போக்கறியான் சொல்லுகிற ஞானந் தானே? | 73 |
| | |
தானென்ற விடங்காட்டி நாதங் காட்டிச் சாற்றுகிற மவுனத்தின் சார்பு காட்டி | |