அறிந்துகொள் இவளைமுன்னே யையா வைத்தே ஆதரித்துக் கேட்டதெல்லா மருளிச் செய்வாள் அறிந்துகொள் அகண்டத்தே ஞான சக்தி ஆத்தாளைப் பூசித்தா லறுப தீவாள் அறிந்துகொள் சடமெல்லா மவளே யாச்சே அப்பனுக்கு மெலும்போடு நரம்பி ரண்டே. | 78 |
| | |
இரண்டான வாயுவினி லொன்று சத்தி ஈராகச் சிவமேது பிராண வாயு ஒன்றாக நாடிநின்றால் சுழுனை யாச்சு யோகமுமாம் ஞானமுமா முற்றே யேறு தண்டான சுழுமுனைதா னடுவில் நிற்குஞ் சாதகமா யிதற்குள்முக் கிரந்தி யுண்டு நன்றான சுழுமுனையிற் பிராண னேரில் நாதாந்த யோகமிது நாடிக் காணே. | 79 |
| | |
காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகங் கண்டுகொள்ளு தாமரையில் நூல்போ லாடும்; ஊணப்பா அதிலிரட்டி யபான வாயு உற்றுநின்றி ரண்டையுநீ கண்டா யானால் பூணப்பா விதற்குள்ளே ஞான யோகம் புசுண்டருக்குச் சித்திகை லாய தேகம் தோணப்பா நவகோடி மானா கண்டார் சுகயோக மாவது இந்தத் துறையு மாமே. | 80 |
| | |
ஆமப்பா ஆசைவிடக் கருவைச் சொல்வேன் அறிந்துகொண்டே அறிவாலே நின்று பாரு; சேமப்பா திரோதாயி யாரென் றக்கால் செகமெலாம் பெண்ணான வுருத்தா னப்பா! ஓமப்பா பொன்மண்வா சனையி னாசை ஒற்றிநின்ற விந்திரிய மயக்கத் தாசை நாமப்பா வென்றுசொன்ன ஆண்மை யாசை நல்வினைக்குந் தீவினைக்கும் வித்து மாச்சே. | 81 |
| | |
வித்துக்குள் பாவமென்ன புண்ய மென்ன வெகுகோடி புண்ணியத்தால் புருட சன்மம் | |