பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம் ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே. | 155 |
| | |
செம்பினில் களிம்புவந்த சீதரங்கள் போலவே அம்பினில் எழுதொணாத அணியரங்க சோதியை வெம்பிவெம்பி வெம்பியே மெலிந்துமேல் கலங்கிட செம்பினில் களிம்புவிட்ட சேதியேது காணுமே. | 156 |
| | |
நாடிநாடி உம்முளே நயந்துகாண வல்லிரேல் ஓடியோடி மீளுவார் உம்முளே அடங்கிடும் தேடிவந்த காலனும் திகைத்திருந்து போய்விடும் கோடிகால மும்முகந்து இருந்தவாறு எங்ஙனே. | 157 |
| | |
பிணங்குகின்றது ஏதடா பிரஞ்ஞைகெட்ட மூடரே பிணங்கிலாத பேரொளிப் பிராணனை அறிகிலீர் பிணங்குவோர் இருவினைப் பிணக்கறுக்க வல்லிரேல் பிணங்கிலாத பெரிய இன்பம் பெற்றிருக்க லாகுமே. | 158 |
| | |
மீனிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர் மீனிருக்கும் நீரலோ மூழ்வதுங் குடிப்பதும் மானிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர் மானுரித்த தோலலோ மார்புநூல் அணிவதும். | 159 |
| | |
ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர் ஆட்டிறைச்சி அல்லவோ யாகம்நீங்கள் ஆற்றலே மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றுமின்றும் வேதியர் மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது. | 160 |
| | |
அக்கிடீர் அனைத்துயிர்க்கும் ஆதியாகி நிற்பது முக்கிடீர் உமைப்பிடித்து முத்தரித்து விட்டது மைக்கிடில் பிறந்திறந்து மாண்டுமாண்டு போவது மொக்கிடீர் உமக்குநான் உணர்த்துவித்தது உண்மையே. | 161 |
| | |
ஐயன்வந்து மெய்யகம் புகுந்தவாறு எங்ஙனே செய்யதெங்கு இளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே ஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்டபின் வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே. | 162 |