நவ்வுமவ்வை யுங்கடந்து நாடொணாத சியின்மேல் வவ்வுயவ்வு ளுஞ்சிறந்த வண்மைஞான போதகம் ஒவ்வுசுத்தி யுள்நிறைந்த துச்சியூ டுருவியே இவ்வகை அறிந்த பேர் கள்ஈசன்ஆணை ஈசனே. | 163 |
| | |
அக்கரம் அனாதியோ வாத்துமம் அனாதியோ புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ தர்க்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ தற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ. | 164 |
| | |
பார்த்ததேது பார்த்திடில் பார்வையூ டழிந்திடும் சுத்ததாய் இருப்பிரேல் குறிப்பிலச் சிவமதாம் பார்த்தபார்த்த போதெலாம் பார்வையும் இகந்துநீர் பூத்த பூவுங் காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே. | 165 |
| | |
நெத்திபத்தி உழலுகின்ற நீலமா விளக்கினைப் பத்தியொத்தி நின்றுநின்று பற்றறுத்தது என்பலன் உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேலொளி அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே. | 166 |
| | |
நீரையள்ளி நீரில்விட்டு நீ நினைத்த காரியம் ஆரையுன்னி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர் வேரையுன்னி வித்தையுன்னி விதத்திலே முளைத்தெழுந்த சீரையுன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம். | 167 |
| | |
நெற்றியில் தியங்குகின்ற நீலமா விளக்கினை உய்த் துணர்ந்து பாரடா உள்ளிருந்த சோதியைப் பத்தியில் தொடர்ந்தவர் பரமயம தானவர் அத்தலத்தில் இருந்தபேர்கள் அவரெனக்கு நாதரே. | 168 |
| | |
கருத்தரிக்கு முன்னெலாங் காயம்நின்றது எவ்விடம் உருத்தரிக்கு முன்னெலா முயிர்ப்புநின்றது எவ்விடம் அருள்தரிக்கு முன்னெலாம் ஆசைநின்றது எவ்விடம் திருக்கறுத்துக் கொண்டதே சிவாய மென்று கூறுவீர். | 169 |
| | |
கருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்ற தேயுவில் உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்புநின்றது அப்புவில் | |