பக்கம் எண் :

420சித்தர் பாடல்கள்

மங்குகின்ற மோகமென்ன? மகேசன் கூறு;
     மருவியந்த மூன்றாலு முலகம் பாழாய்த்
தங்குகின்ற யோகம்போய் ஞானம் பாழாய்ச்
     சமாதியெல்லா மிந்திரியச் சார மூடித்
தொங்குகின்ற மோட்சத்தின் தரைபோ லாகச்
     சூனியமாய் ஞானமெல்லாந் தோற்று மாறே.
86
  
மாறான பெண்ணாசை விட்டே னென்பார்;
     மருவியவள் தனிப்பட்டால் சரணஞ் செய்வார்
தாறான சயனத்திற் பெண்தான் சொல்லில்
     சதாசிவனால் முடியாது; மற்றோ ரேது?
கூறான விந்துவிடக் கோப மோகங்
     குறியழிக்கும் நினைவழிக்குங் கூட்டைக் கொல்லும்
வீறான விந்துவுக்கு மேலே நின்று
     விருதுபெற்ற மௌனியல்லோ வெட்டி னாரே.
87
  
வெட்டினார் மௌனியந்த விந்து பாம்பை
     வேதாந்த மென்றதொரு வாளி னாலே
தட்டினார் மாய்கையைத்தான் சண்ணிக் கீழே
     சச்சிதா னந்தவெள்ளச் சார்பி னாலே;
ஒட்டினா ரொட்டினநிர்க் குணத்தின் மட்டும்
     உத்தமனே யதுவல்லோ ஞான வீதி?
தெட்டினார் தெட்டினார் சகல ரெல்லாம்
     செகசால வித்தையென்று தெளிந்து பாரே.
88
  
தெளிவதுதா னெளிதல்ல வாய்ப்பேச் சல்ல;
     சிங்காரப் பெண்கண்டால் ஞானம் போச்சு
அழிவதுதான் சடலத்துக்கே யடுத்த கூறாம்
     அதரமுண்டு கூடுது போக மென்பார்
கழிவதுதான் காலேது வாசி யேது
     கைவிட்ட மைதுனத்திற் கலப்ப தேது?
ஒழிவதுதா னெந்நாளோ வென்று லோகர்
     ஒருகோடி மாண்டார்க ளூன்றிக் காணே.
89
  
காணப்பா பிறப்பிறப்புப் பெண்ணா லாச்சு;
     கைகடந்த மாயமெல்லாம் பெண்ணா லாச்சு;