ஆகவப்பா இதற்குள்ளே ஞானம்நூறு அப்புறத்தே சொன்னதொரு ஞானம்நூறு ஆகவப்பா இருபத்தோ டெழுநூ றுந்தான் அறிந்தமட்டும் சொல்லிவந்தேன் வல்லோருண்டோ ஆகவப்பா பார்த்தேயிக பரமுஞ் சித்தி ஆதியென்ற குருவருளால் சொன்ன முற்றே. | 102 |
| | |
பின் ஞானம் நூறு கைலாயப் பரம்பரத்தி லென்னை யாண்ட கடவுளெனுந் தெட்சணா மூர்த்தி பாதங் கைலாயத் தெனையீன்ற ஆயி பாதங் கருணையுடன் போற்றி நித்தம் ஞானம் சொல்வேன்; கைலாய நிர்க்குணநிர் மலமே தேவர் காட்டுகின்றீர் கேசரியின் மயமாய்க் கையில் கைலாய பரம்பரையாய் வந்த பேர்க்குக் கடைப்பிள்ளை ஞானத்தைப் பாடுவேனே; | 1 |
| | |
பாடுகின்றேன் சரியையென்ன? தேவி தீட்சை பரிவாகக் கிரியையென்ன? தேவி பூசை; பாடுகிறேன் யோகமென்மா சற்ற அமுதம்; பாங்கான ஞானமென்ன? மௌனத் தந்தம் பாடுகிறேன் திடத்திரனா யீதோ கீதம்; பாங்கான அஞ்சலிதான் மனமாந் தேகம் பாடுகிறேன் பரன்முனிவ ளுக்கே யென்றால் பரிவானால் ஞானவித்தை பலிக்குந் தானே. | 2 |
| | |
தானென்ற ஞானத்தின் பூமி கேளு; சாதகமா யோகமென்ற அபர வீடு வானென்ற பூமியிலே வித்தை கேளு; அறிவிற்கு மறிவான வுகார விந்து வேனென்ற வெளியெல்லாம் படைத்து நின்று வேதாந்த அண்டமென்ற மகார மாச்சு; கோனென்ற நாதமங்கே குமுறி யாடும்; கூப்பிட்டாற் கேளாது கண்ணும் போச்சு. | 3 |