தேட்டான வரைகடந்து மனமுந் தாண்டித் தெளிவான அறிவினுடை வரையுந் தாண்டி நீட்டான பூரணத்தின் வரைகா ணென்று நேரான மூன்றுவரை யேறிச் சொக்கிப் பூட்டான பூட்டிறங்கி விட்டேன் மைந்தா புகழான வெறுவெளியி லேறப் போகா ஆட்டான கைலாயப் பரம்பரை வந்த ஆச்சரிய மூலகுரு வாக்குங் கேளே. | 8 |
| | |
கேளப்பா மூலர்க்குகா லாங்கி பிள்ளை; கெடியான காலாங்கி மைந்தர் போகர்; நீளப்பா போகர்பிள்ளை கொங்க ணர்தான்; நேராக நான்குமுறை பேர னாகித் தாளப்பா மேருவிலே தவசு பண்ணிச் சாதகமாய்க் கைலாய வர்க்க மானார்; ஆளப்பா பிள்ளையென்றா லவரே பிள்ளை; ஆச்சரிய மின்னமுண்டு சொல்லு வேனே. | 9 |
| | |
சொல்லுகிறேன் சிங்கென்று முன்னே யூன்றிச் சோதிகண்ட பின்பதிலே மனத்தை யூன்றிச் சொல்லுகிறேன் அங்கென்று பின்னே யூன்றிச் சோதியிலே அக்கரங்கள் தனமுங் கண்டு சொல்லுகிறேன் பின்பல்லோ மவுன முன்னித் தொடர்ந்தேறித் தளமெல்லாம் பார்த்துக் கொண்டு சொல்லுகிறேன் புருவமை யத்திற் கூடித் துரியமென்ற அறிவினுள்ளே சொக்கினாரே. | 10 |
| | |
சொக்கியல்லோ அறிவைவிட்டே அகண்ட மேறித் துயரறவே சமாதியுள்ளே கற்ப முண்டு சொக்கியல்லோ மூன்றுவரை சடத்தோ டொக்கச் சுருபவரை காணவென்று துணிந்து பொங்கிச் சொக்கியல்லோ ஏறுவதற்கிவ் விதமா மென்று சோதித்துக் குளிகையெல்லாம் பார்த்துப் பார்த்துச் சொக்கியல்லோ ஏற்றிவைக்குஞ் சுரூபமணியென்று சூட்சமாய் மூலருடை நூல் பார்த்தாரே. | 11 |