பார்த்தறிந்தா ரிந்தமணி வாத மென்று பரிவான கயிலாய தெட்சணா மூர்த்தி சேர்த்தறிந்த தம்முடைய வர்க்க மான சீடரிலே திருமூலர் சண்டி கேசர் மாத்தறிஞ்ச சனகாதி நால்வ ரோடு மருவிநின்ற வியாக்ரபதஞ் சலியினோடு போக்கறிந்த வடியெனொடொன் பதுபேர் பிள்ளை புகழான பூரணத்தி லெழும்பென் றாரே. | 12 |
| | |
எழும்பையிலே நிர்மலம்போற் சடமோ காணா தேனென்றாற் பூரணந்தா னெதுக்குப் பேசும் எழும்பையிலே குளிகைமுதற் காண்டிற் பத்தே ஏற்றியதோர் தீபத்தின் சுடர்போற் காணும் எழும்பையிலே தேகமில்லை கோடா கோடி எடுத்தசடஞ் சூட்சுமமா யிருந்த தென்றால் எழும்பையிலே மேலெழும்பி மௌன முற்றும் இருந்துரைத்த சமாதியுடைப் பலந்தான் காணே. | 13 |
| | |
காணப்பா சொரூபமொன்று கலிதா னொன்று கையடங்கா தட்டமா சித்தி யொன்று பூணப்பா கைகொடுசின் மயமாந் தேவர் பொருளோடே அருளான போக்குக் காட்டித் தோணப்பா தோன்றிநிற்கும் சும்மா அம்மா சுபமாக இசைந்ததிலே சொக்கு மென்பார்; வீணப்பா மற்றதென்சின் மயத்தைக் காட்டி வேதாந்த மூலத்தை விளம்பென் றாரே. | 14 |
| | |
விளம்பினார் சனகாதி வேதங் கோடி; விதத்தாரே மவுனத்தைச் சண்டி கேசர் விளம்பினார் பதஞ்சலியு மனந்தங் கோடி; விரித்தல்லோ திருமூல ரனேகஞ் சொன்னார்; விளம்பினார் வாவாதா மென்று யானும் விரியாம லிருநூறு ஞானம் சொன்னேன்; விளம்பினார் வெகுவாக என்னூல் கொஞ்சம் வேதாந்த மிருநூறும் விரைந்து காணே. | 15 |