பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்429


புக்கியல்லோ சுழல்காற்றின் துரும்பு போலே
     புலம்பினார் மூலருடைப் பேரன் பேரன்
மக்கியல்லோ மனம்போச்சுக் குளிகை போச்சு;
     மாறாத மௌனமுன்னே மாண்டு போச்சு;
ஒக்கியல்லோ சிலம்பொலிதா னுள்ளே வாங்கி
     ஓகோகோ குளிகையது கீழே வாங்கு
சொக்கியல்லோ யென்செய்வே னென்றே யேங்கித்
     துரியத்தை விட்டு மெள்ளக் கீழ்க்கொண் டாரே.
20
  
கீழ்க்கொண்டார் கீழ்க்கொண்ட கொடியாஞ் சித்தர்
     கேசரத்தை விட்டுமெள்ள அறிவில் நின்று
நாட்கொண்ட பாடெல்லாம் நினைத்துக் கொண்டு
     நான்பிழைத்தே னான்பிழைத்தே னென்று சொல்லி
ஆட்கொண்டா என்குருபூ ரணத்தில் நின்றீர்
     ஆச்சரிய மெனையீன்று மிவரை யையா!
வேட்கொண்டா யென்றவத்தை யீந்த னையா
     வெறுவெளியாஞ் சிலம்பொலியை மேவென் றாரே.
21
  
மேவென்று சொல்லுமுன்மேற் கண்ட போகர்
     வேதாந்த சிரோமணியைப் பெறுதி மைந்தா!
கோனென்ற குருவுக்கும் அவரே சீடர்
     கோடிலட்சத் தொருசீட ருண்டோ காணேன்;
பானென்ற வேதாந்தஞ் சித்தாந் தம்பார்
     பறக்கிறதோர் குளிகைமுதல் வாதம் பார்த்துத்
தேனென்ற கைலாய வர்க்க மாகிச்
     சித்தருக்குச் சித்தராய் ரிஷியா னாரே.
22
  
ரிஷியென்ன சிலம்பொலியைக் கண்டா ருண்டோ
     நேராக வதற்குள்ளே சேர்ந்தா ருண்டோ
ரிஷியென்ன ரசவித்தை யறிந்தா ருண்டோ
     நிமிடத்தில் கவனமுற்றுத் திரிந்தா ருண்டோ
ரிஷியென்ன அண்டமுதற் புவனந் தாண்டி
     நின்றநிறை யாய்க்கண்டு வந்தோ ருண்டோ
ரிஷியென்ன மவுனமுற்றுச் சுமாதிக் குள்ளே
     நின்றதனால் திகைமையாய் நினைவாய்க் காணே.
23