விளங்கியதோர் கொங்கணரால் மூல வர்க்க மகத்துவந்தா னுண்டாச்சு மக்காள் மக்காள்! விளங்கியதோர் கீர்த்தியுண்டோ வுங்க ளாலே வெட்டவெளிக் கப்புறத்தே செல்ல மாட்டீர்; முளங்கியதோர் குளிகையென்ன காய சித்தி மூச்சற்ற விடத்திலே நோக்க மென்ன பிளங்கியதோர் சித்தருட வர்க்க மென்ன பேய்மக்கள் மூவைந்து பேரிற் றானே. | 28 |
| | |
தானென்று சொன்னதென்ன என்னைப் பெற்ற சச்சிதா னந்தவெள்ளத் தயவுள் ளாரே கோனென்ற முக்குளிகை நமக்குண் டையா கொடியதொரு மவுனவித்தை நமக்குண் டையா பானென்ற வாசிவித்தை நமக்குண் டையா பாங்கான காயசித்தி நமக்குண் டையா வானென்ற வெட்டவெளி யேறி யாடி வருகிறேன் விடைகொடுத்து வாழ்த்தி டீரே. | 29 |
| | |
வாழ்த்தியுன்னை யனுப்பினால் பூர ணந்தான் வரைகடந்தே ஆறுவரை யேறு வாயோ? வாழ்த்தியுன்னை யனுப்பினால் நரகத் துள்ளே மயங்காமற் சொல்லுவையோ மைந்தா சொல்லு வாழ்த்தி யுன்னை யனுப்பினா லிடியிற் குள்ளே மயங்காமற் றியங்காமல் மருவு வாயே? வாழ்த்தியுன்னை யனுப்பினா லென்ன முன்னால் வாய்ப்பேச்சா வரைகடக்கும் மார்க்கம் தானே? | 30 |
| | |
மார்க்கமென்ன எனையீன்கை லாய மூர்த்தி! மகத்தான சமாதியுள்ளே கற்பம் வாழ்ந்தேன் சேர்க்கமென்ன சிவாலயங்கள் பலியேற் றுண்டேன் சிவமேது நீரன்றி வேறு காணேன் ஆர்க்கமென்ன குளிகையிட்டுச் சென்று போறேன் அங்கங்கே மனந்தேறிப் போறேன் போறேன் தீர்க்கமென்ன சொக்கினாற் சொக்கிப் போறேன் திரும்பினால் சடத்தோடே திரும்பு வேனே! | 31 |