உன்னிடீர் அண்டமுதற் புவனந் தாண்டி ஒரு நொடிக்குட் பதந்தாண்டி முப்பாழ் தாண்டி மன்னுதிரு வருள்மனையைக் கண்டு போற்றி மருவியதோர் புரணத்திற் சென்றே யேறிப் பன்னிடுவீர் தினந்தோறும் பழக்க மையா பாயுடனே யதுநடந்து வரைக ளாறும் தன்னிடிர்யோ கறியேனும் அருளாற் போறேன் தயாநிதியே கடாட்சித்தே அனுப்பு வீரே. | 36 |
| | |
அனுப்புவது பிறகுனையான் சென்று வாரேன் அவ்வளவுங் குகைக்குள் நீ பட்ட மாய்நில் தனுப்பிறந்த தளிபோலச் சென்று தாண்டிச் சாதகமாய்ச் சொருபமணி மூன்றுங் காட்டிச் கணுப்பிறந்த கமலியது பூண்டுங் காட்டிக் காட்டிலே யட்டமாசித் தியினால் காட்டி உணுப்பிறந்தோர் தாண்டிலொரு வரையி லேறி உற்றுமறு வரைதனி லோடி னேனே. | 37 |
| | |
ஓடினேன் மூவரையி லிடியோ கோடி ஓகோகோ ரவிகோடி வன்னி கோடி வாடினேன் மனமிளைத்தேன் மயக்க மானேன் வாயிட்ட குளிகைசென்றே யேறிப் போறேன் நாடினேன் கற்பமொன்று மூவரையிற் றாண்டி நலமாக நாலுவரைக் குள்ளே சென்றேன் ஆடினே னாடினே னறிவு கெட்டேன் அரகரா மோசமென்றே யிறங்கி னேனே. | 38 |
| | |
இறங்கினே னால்வரைக்கப் புறமே போக என்னாலே முடியாதே யேதோ அஞ்சில் இறங்கினே னென்மக்கா ளும்மா லாமோ ஏதுசொன்னாய் பேய்ப்பிள்ளா யென்ன பேச்சு இறங்கினே னிந்நாள்பின் னையார் சொல்லார் ஏகவெளி திக்காடு மிடியோ கோடி இறங்கினே னென்னாலே முடிவு காணேன் ஏறினார் கொங்கணர்தா மேறி னாரே. | 39 |