சுகமதாக எருதுமூன்று கன்றையீன்றது எவ்விடம் சொல்லுகீழு லோகமேழும் நின்ற வாறது எவ்விடம் அளவதான மேருவும் அமைவதானது எவ்விடம் அவனுஅவளும்ஆடலால் அருஞ்சீவன் பிறந்ததே. | 178 |
| | |
உதிக்குமென்றது எவ்விடம் ஒடுங்குகின்ற துஎவ்விடம் கதிக்குநின்றது எவ்விடங் கன்றுறக்கம் எவ்விடம் மதிக்கநின்றது எவ்விடம் மதிமயக்கம் எவ்விடம் விதிக்க வல்ல ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே. | 179 |
| | |
திரும்பியாடு வாசலெட்டு திறமுரைத்த வாசலெட்டு மருங்கிலாத கோலமெட்டு வன்னியாடு வாசலெட்டு துரும்பிலாத கோலமெட்டு கத்திவந்த மருளரே அரும்பிலாத பூவும்உண்டு ஐயனாணை உண்மையே. | 180 |
| | |
தானிருந்து மூலஅங்கி தணலெழுப்பு வாயுவால் தேனிருந்து வரைதிறந்து தித்தியொன்று ஒத்தவே வானிருந்த மதியமூன்று மண்டலம் புகுந்தபின் ஊனிருந்த தளவுகொண்ட யோகிநல்ல யோகியே. | 181 |
| | |
முத்தனாய் நினைந்தபோது முடிந்த அண்டத்துச்சிமேல் பத்தனாரும் அம்மையும் பரிந்துஆடல் ஆடினார் சித்தரான ஞானிகாள் தில்லையாடல் என்பீர்காள் அத்தனாடல் உற்றபோது அடங்கலாடல் உற்றதே. | 182 |
| | |
ஒன்றுமொன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே அன்றுமின்றும் ஒன்றுமே அனாதியான தொன்றுமே கன்றல்நின்று செம்பொனைக் களிம் பறுத்து நாட்டினால் அன்றுதெய்வ ம்உம்முளே அறிந்ததே சிவாயமே. | 183 |
| | |
நட்டதா வரங்களும் நவின்ற சாத்திரங்களும் இட்டமான ஓமகுண்டம் இசைந்தநாலு வேதமும் கட்டிவைத்த புத்தகம் கடும்பிதற்று இதற்கெலாம் பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறியவே. | 184 |
| | |
வட்டமான கூட்டிலே வளர்ந்தெழுந்த அம்புலி சட்டமீ படத்திலே சங்குசக் கரங்களாய் | |