விட்டதஞ்சு வாசலில் கதவினால் அடைத்தபின் முட்டையில் எழுந்தசீவன் விட்டவாறது எங்ஙனே. | 185 |
| | |
கோயில்பள்ளி ஏதடா குறித்துநின்றது ஏதடா வாயினால் தொழுதுநின்ற மந்திரங்கள் ஏதடா ஞாயமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால் காயமான பள்ளியிற் காணலாம் இறையையே. | 186 |
| | |
நல்லவெள்ளி ஆறதாய் நயந்தசெம்பு நாலதாய் கொல்லுநாகம் மூன்றதாக் குலாவு செம்பொன் இரண்ட தாய் வில்லினோசை ஒன்றுடன் விளங்கஊத வல்லிரேல் எல்லையொத்த சோதியானை எட்டுமாற்ற லாகுமே. | 187 |
| | |
மனத்தகத்து அழுக்கறாத மவுனஞான யோகிகள் வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார் மனத்தகத்து அழுக்கறுத்த மவுனஞான யோகிகள் முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே. | 188 |
| | |
உருவுமல்ல ஒளியுமல்ல ஒன்றதாகி நின்றதே மருவுமல்ல கந்தமல்ல மந்தநாடி உற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல அரியதாக நின்ற நேர்மை யாவர்காண வல்லிரே. | 189 |
| | |
ஒரெழுத்து உலகெலாம் உதித்தஉட் சரத்துளே ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர் மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே. | 190 |
| | |
ஆதியந்த மூலவிந்து நாதமைந்து பூதமாய் ஆதியந்த மூலவிந்து நாதம்ஐந்து எழுத்துமாய் ஆதியந்த மூலவிந்து நாதமேவி நின்றதும் ஆதியந்த மூலவிந்து நாதமே சிவாயமே. | 191 |
| | |
அன்னமிட்ட பேரெலாம் அனேககோடி வாழவே சொன்னமிட்ட பேரெலாந் துரைத்தனங்கள் பண்ணலாம் வின்னமிட்ட பேரெல்லாம் வீழ்வர்வெந் நரகிலே கன்னமிட்ட பேரெலாம் கடந்துநின்ற திண்ணமே. | 192 |