பக்கம் எண் :

516சித்தர் பாடல்கள்

ஊரிலா ஆறிருந் தென்ன
நமக்கு உதவியில்லா மனிதர் உறவிருந்தென்ன

     இவைகள்  எல்லாம்   இருந்தும்   ஒன்றுதான்  இல்லாமல்  இருந்தும்
ஒன்றுதான்.

உதவாக்கரைகளைப் பட்டியலிடுகின்றார்.

கொலைக் களவு நீக்கிவிட வேண்டும் உலகில்
கொடியோன் எனும் பேரைப் போக்கிடவேணும்
சோதியைக் கண்டறிய வேணும்
அட்ட கன்மந் தெரிய வேணும்
அதற்கு ஆதாரமான கலை தெரியவேணும்

என்று வேண்டுவனவற்றை தனிப்பட்டியல் இடுகின்றார். பாடல்கள் படிப்பதற்கு
எளியனவாய், ஞான அமுதத்தைப் புகட்டுகின்றன.

பிர்ம சொரூபத்தை நாடு                             உன்
கர்ம வினை ஓட வழிதனைத் தேடு
 
  
எட்டி பழுத்தாலும் என்ன?                           காசு
ஈயாத லோபிகள் வாழ்ந்தாலும் என்ன?
கட்டி வராகனிருந்து என்ன?                       அதைக்
காவல்கள் போட்டுநீ காத்திருந்து என்ன?
1
  
நீரிலாக் கிணறு இருந்தென்ன?                      மனம்
நேராய் நடவாத பிள்ளையிருந்து என்ன?
ஊரிலா ஆறிருந்து என்ன?                        நமக்கு
உதவி இல்லாது மனிதர் உறவிருந்து என்ன?
2
  
தவமது செய்தாலும் என்ன?                           நீ
சமத்தன் என்றேபே ரெடுத்தாலும் என்ன?
சிவபூசை செய்தாலும் என்ன?                       அரன்
சேவடியை மறவாமல் இருந்தாலும் என்ன?
3