பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்517


காசிபோய் வந்தாலும் என்ன?                       பெரிய
கனக தண்டிகையேறித் திரிந்தாலும் என்ன?
வாசியைத் தெரிந்தாலும் என்ன?                     நாளும்
மகராசன் என்றுபேர் பெற்றாலும் என்ன?
4
  
புராணம் படித்தாலும் என்ன?                       இந்தப்
பூலோகம் தன்னில் மறைந்திருந்து என்ன?
திராசு நிலையாய் இருந்து என்ன?                    தினம்
சிவசிவா என்றே செபித்தாலும் என்ன?
5
  
வித்தைகள் பலபடித்து என்ன?                          நீ
மென்மேலுஞ் சாத்திரம் கற்றாலும் என்ன?
சித்துகள் தெரிந்தாலும் என்ன?                      நாளும்
சிறப்பாக வார்த்தை உரைத்தாலும் என்ன?
6
  
பெண்டாட்டி பிள்ளை இருந்து என்ன?              முதிர்ந்த
பெரியோர்கள் பாதத்தைப் பூசித்தும் என்ன?
துண்டாகப் போயிருந் தென்ன?                         நீ
துலையாத கற்கோட்டை கட்டியிருந்து என்ன?
7
  
மாடிமேல் வீடிருந்து என்ன?                         இந்த
வையகத் தோர்மெய்க்க வாழ்ந்தாலும் என்ன?
கூடிக் குலாவி இருந்த தென்ன?                கையெடுத்துக்
கும்பிட்டுக் கூத்தாடித் திரிந்தாலும் என்ன?
8
  
தாய்தந்தை துணையிருந்து என்ன?                    உற்ற
சனங்களும் உபகார மாய் இருந்தென்ன?
நாய்போல் அலைந்தாலும் என்ன?                    வரும்
நமனுக்குத் தப்பி ஒழிந்தாலும் என்ன?
9
  
சரியை கடந்திடவும் வேணும்                        இந்தச்
சகத்தினுட மாயை ஒழித்திடவும் வேணும்.
கிரியையைப் பார்த்தறிய வேணும்                மனவாக்குக்
கெட்டாத சொரூபத்தைத் தெரிந்திடவேணும்
10
  
யோகந் தெரிந்திட வேணும்,                         உனக்
குண்டிமுதல் ஆனதைச் சுருக்கிடவேணும்,