பாகமது தெரியவே வேணும், குரு பாதம் அதை மறவாமல் இருந்திடவேணும். | 11 |
| |
கொலைகளவு நீக்கிவிட வேணும் உலகில் கொடியோன் எனும்பேரைப் போக்கிடவேணும் புலைகளைத் தொலைத்து விடவேணும் இன்று பொல்லாத மாயையை விலக்கிடவேணும். | 12 |
| |
சோதியைக் கண்டு அறிய வேணும் வேதச் சுடரெனும் தீபத்தைப் பார்த்தறிய வேணும் ஆதிம்பிர் மந்தெரிய வேணும் அதை அன்புடன் சாத்திரத் தாற்தெரிய வேணும். | 13 |
| |
ஞானநிலை தெரியவே வேணும் இதில் நால்வேத உண்மை தெரிந்திட வேணும் மோன நிலைதெரியவே வேணும் யோக முடிவான வத்துவை முன்தெரிய வேணும். | 14 |
| |
அட்ட கரு மம்தெரிய வேணும் அதற் காதார மானஆலை தெரிய வேணும் திட்டமாய் வாசிநிலை வேணும் இத தெரிந்துகொண் டாற்சித்தன் ஆகவே வேணும் | 15 |
| |
பந்தங் கடந்தவனே சித்தன் பாரிலே பஞ்சமா பாதகத்தை விட்டோனே பத்தன் இந்தவிதந் தெரிந்தவனே சித்தன் அதில் என்நிலைமை கண்டவனே சீவ முத்தன் | 16 |
| |
ஆனந்தக் களிப்பு பிர்ம சொரூபத்தை நாடு உன் கர்ம வினையோட வழிதனைத் தேடு மர்மந் தெரிவிக்கும் வீடு கண்டு தர்ம நெறிமுறைதன்னில்நீ கூடு. | 1 |
| |
ஆதி பரம்பொருளைப் போற்றி என்தன் ஆத்தாளின் பாதத்தை மனதினி லேற்றி | |