ஓங்கார வட்டம் உடலாச்சு பின்னும் ஊமை எழுத்தே உயிராச்சு ரீங்காரம் ஸ்ரீங்கார மான வகையதை நீதா னறிவாய் ஆனந்தப் பெண்ணே | 3 |
| | |
அகாரம் உகாரத் துடன்பொருந்த அது யகார மானது அறிந்துகொண்டு சிகார மான தெளிவினி லேநின்று தேர்ந்து கொள்வாய் ஆனந்தப் பெண்ணே | 4 |
| | |
பஞ்ச பூ தங்களைக் கண்டறிந்தோர் இகப் பற்றினைச் சற்றும் நினைப்பாரோ சஞ்சலம் இல்லாது யோக வழியதைத் தானறிந்துய்வாயா ஆனந்தப் பெண்ணே | 5 |
| | |
தவ நிலையை அறிந்தோர்க்கு ஞானந் தன்னால் தெரியும் எனவேதான் நவசித் தாதிகள் கண்டு தெளிந்ததை நன்றாய் அறிவாய் ஆனந்தப் பெண்ணே. | 6 |
| | |
வாசி நிலையை அறிந்துகொண்டால் தவம் வாச்சுது என்றே மனது கந்து தேசி எனும்பரி மீதேறி நாட்டம் செய்தது அறிவாய் ஆனந்தப் பெண்ணே. | 7 |
| | |
நந்தி கொலுவைத் தெரிந்தோர்கள் வாசி நாட்டம் விடார்கள் ஒருக்காலும் உந்திக் கமலத்தில் அந்தணன் பீடத்தை உற்றறிந் துய்வாய் ஆனந்தப் பெண்ணே. | 8 |
| | |
மாலுந் திருவும் வசித்திருக்கும் இடம் வணங்கி இப்பால் செல்லும்போது மேலும் உருத்திரன் ருத்திரி சேவையை மேவியே காண்பாய் ஆனந்தப் பெண்ணே. | 9 |
| | |
எந்தெந்தப் பூசை புரிந்தாலும் பரம் ஏகம் என்றே கண்டு அறிந்தாலும் | |