பக்கம் எண் :

528சித்தர் பாடல்கள்

சிந்தையும் அடங்கு உபாயம் சதாசிவன்
சீர்பாதம் அல்லோவா ஆனந்தப் பெண்ணே.
10
  
தானே தானாக நிறைந்து நின்ற                       சிவ
தற்பரம் ஆகிய உற்பணத்தை
நானே நான் என்று அறிந் துக்கொண்டு பர
நாட்டம் அறிவாய் ஆனந்தப் பெண்ணே.
11
  
வஞ்சப் பிறப்பும் இறப்புக்கு மேகு                    முன்
வாசனை என்றே அறிந்துகொண்டு
சஞ்சல மற்றுப்பி ராணாயஞ் செய்திடில்
தற்பர மாவாய் ஆனந்தப் பெண்ணே.
12
  
சரியை கிரியை கடந்தாலும்                        யோகம்
சாதித்து நின்றருள் பெற்றாலும்
உரிய ஞானவி சர்க்கம் இலாவிடில்
ஒன்றும் பயனின்று ஆனந்தப் பெண்ணே.
13
  
தன்னைஇன் னானெனத் தான்தெரிந்தால்            பின்னும்
தற்பர னைப் பார்க்க வேணுமோதான்
அன்னையும் அப்பனும் போதித்த மந்திரம்
அறிந்தவன் ஞானி ஆனந்தப் பெண்ணே.
14
  
எண்சாண் உடம்பும் இதுதாண்டி                     எழில்
ஏற்கும் நவவாசல் உள்ளதடி
தண்மை அறிந்து நடப்போர்க்கு எட்டுத்
தலங்கள் தோணும் ஆனந்தப் பெண்ணே.
15
  
அஞ்சுபேர் கூடி அரசாள                            ஒரு
ஆனந்தக் கட்டடங்கட்டி வைத்த
செஞ்சிக் கோட்டையைக் கண்டிதுதானெனத்
தெரிந்துக் கொள்வாய் ஆனந்தப் பெண்ணே.
16
  
ஊத்தைச் சடலம் இதுதாண்டி                           நீ
உப்பிட்ட பாண்டம் இதுதாண்டி
பீத்தத் துருத்தி இதுதாண்டி நன்றாய்ப்
பேணித் தெளிவாய் ஆனந்தப் பெண்ணே.
17