ஆத்தாள் எந்தனைப் பெற்றுவிட்டாள் என்தன் ஆப்பனும் என்னை வளர்த்துவிட்டார் வேத்தாள் என்று நினையாமல் இதன் விபரங் கேட்பாய் ஆனந்தப் பெண்ணே. | 18 |
| |
இந்தச் சடலம் பெரிதென எண்ணியான் இருந்து வீண்காலந் தான்கழித்துச் சொந்தச் சடலம் எதுவெனப் பார்த்திடில் சுத்தமாய்க் காணோம் ஆனந்தப் பெண்ணே. | 19 |
| |
மணக்கோலம் கண்டு மகிழ்ந்த பெண் னோடுபின் மக்களைப் பெற்று வளர்த்து எடுத்துப் பிணக்கோலம் ஆவது அறியாமல் வீணே பிதற்றுவது ஏதுக்கு ஆனந்தப் பெண்ணே. | 20 |
| |
எல்லா பொருள்களும் எங்கிருந்து வந்த என்றுநான் உற்றிதைப் பார்க்கையிலே நல்லதோர் மண்ணினில் உற்பத்தி என்றுபின் நன்றாய்த் தோணுதே ஆனந்தப் பெண்ணே | 21 |
| |
செத்தபின் கொண்டே சமாதிசெய்து அப்பால் சிலநாள்கள் கழித்தந்த மண்ணெடுத்து உய்த்தோர் பாண்டம் ஆகச் சுட்டுப்பின் உலகோர்க்குதவு ஆனந்தப் பெண்ணே. | 22 |
| |
சகல பொருள்களும் மண்ணாய் இருப்பதைச் சற்று நிதானித்துப் பார்க்கையிலே பகவான் அங்கங்குஎள் ளெண்ணெய்யைப் போலவே பற்றி இருப்பார் ஆனந்தப் பெண்ணே. | 23 |
| |
மண்ணில் பிறந்தது அழிந்துவிடும் பார்த்து வைத்த பொருளும் அழிந்துவிடும் கண்ணினில் காண்பது அழிந்து விடுமென்று கண்டறிந்து கொள் ஆனந்தப் பெண்ணே. | 24 |
| |
பெற்ற தாய் தந்தை சதமாமோ? உடல் பிறப்புச் சுற்றஞ் சதமாமோ? | |