பக்கம் எண் :

530சித்தர் பாடல்கள்

மற்றுஉள் ளோர்கள் சதமாமோ கொண்ட
மனைவி சதமாமோவாய் ஆனந்தப் பெண்ணே.
25
  
யாரார் இருந்துஞ் சதமலவே                          நம
ஆத்துமா கூடுவிட்டு போகும்போது
ஊரார் ஒருவர் சதமிலை என்பதை
உற்றுநீ காண்பாய் ஆனந்தப் பெண்ணே.
26
  
இந்த வழியைத் தெரிந்துகொண்டே                    இவ்
இகத்தும் பரத்துமாய் சித்தன் என்றே
சொந்தம தாகஎன் பாட்டன் போகரிஷி
சொல்லை அறிவாய் ஆனந்தப் பெண்ணே.
27
  
வழி தெரியாது அலைந்தோர்கள்                     இந்த
மாநிலந் தன்னில் கோடானகோடி
சுழிமுனை தன்னைத்தெரிந்து கொண்டால்பின்
சுகவழி கண்டோர் ஆனந்தப் பெண்ணே.
28
  
ஆசைஒ ழிந்தருள் ஞானம்கண்டு                     வீண்
ஆண்மையைத் தான்சுட் டறுத்து த்தள்ளி
பாசத்தை விட்டுநீ யோகத்தைச் செய்திந்தப்
பாரினில் வாழ்வாய் ஆனந்தப் பெண்ணே.
29
  
இரவைப் பகலாய் இருத்தித் தெரிந்து                    நீ
ஏக வெளியையும் கண்டறிந்த
விரைவாய் இந்த விதத்தெரிந்தால் இம்
மேதினி போற்றும் ஆனந்தப் பெண்ணே
30
  
பெற்றதாய் தந்தை இருந்தால் என்                கொண்ட
பெண்டீர் பிள்ளை இருந்தால் என்
நற்தவஞ் செய்யாது இருக்கில் நமனுக்கு
நாம்சொந்தம் காண்பாய் ஆனந்தப் பெண்ணே.
31
  
தீர்த்தம் ஆடிக் குளித்தாலும்                         பல
தேவா லயம் சுற்றி வந்தாலும்
மூர்த்தி தரிசனஞ் செய்தாலும் நாலாம்
மோனம் உண் டோசொல் ஆனந்தப் பெண்ணே.
32