பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்531


காடு மலைகள் அலைந்தாலும்
கன்மானுட் டானம் புரிந்தாலும்
ஓடுஞ்சித் தத்தை நிறுத்தார்க்குப் பர
உற்பனம் வாய்க்காது ஆனந்தப் பெண்ணே.
33
  
மாயா உலக மயக்கத்தையும்                         நல்ல
வஞ்சியர் மீதுற்ற மோகத்தையும்
தீயா மாந்தர் ஒருக்காலும் வீடு
சேருவது இல்லை ஆனந்தப் பெண்ணே.
34
  
நாலாவகைக் கலைகள்                        அறிந்தாலும்
ஞான வழிகள் தெரிந்தாலும்
மேலான மோனம் அறிந்தவரே துஞ்சா
வீடுறு வார்கள் ஆனந்தப் பெண்ணே.
35
  
சங்கிலி கண்டத்து அணிந்துகொண்டு                    நற்
தவயோகஞ் செய்துஅங்கு இருக்கையிலே
சங்கிலிச் சித்தனென்று என்பாட்டன் வந்து
சாற்றைத்தெரியும் ஆனந்தப் பெண்ணே.
36