பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்533


எத்தனை  பெரிய  அறிவீலி  என்று என்னை நானே நொந்து கொள்கிறேன்
என்று 19வது கண்ணியில் வருந்துகின்றார்.

    இந்த ஞான சித்தர் மனோண்மணி அம்பிகையை வழிபட்டபின் உண்மை
ஞானம்    கைவரப்    பெற்றவராய்    மாறியதைத்    தம்    கண்ணியில்
தெளிவாக்குகின்றார்.

தாயே பகவதியே தற்பரையே அற்புதமே
நேயமுடன் ஞான நெறியையறி விப்பாயே

என்று வேண்டியதற்கு அவள் அருள் புரிந்தமையை

சத்ததிதி னுள்ளே சதாசிவத்தைத் தானறிய
உத்தமியே நின்னருளென் றோர்த்தறிந்து கொண்டேண்டி

என்று  உண்மை  நிலையை  உணர்ந்து  கொண்டமையை உணர்த்துகின்றார்
ஞான சித்தர்.

கண்ணிகள்

ஆதி பராபரையே அம்பிகை மனோன்மணியே
சோதிச் சுடரொளியே சுத்த நிராமயமே.

1
  
தாயே பகவதியே தற்பரையே அற்புதமே
நேயமுடன் ஞான நெறியைஅறி விப்பாயே.
2
  
முடிநடுவும் மூலமுமாய் முச்சுடராய் முப்பொருளாய்
மடிவில்லா மெய்ஞ்ஞான மார்க்கத் தகோசரமாய்.
3
  
அஞ்ஞானக் காடு கடந் தாங்குவழி யேதொடர்ந்து
மெய்ஞ்ஞானங் காணநின்னை வேண்டிஅலைகிறண்டி
4
  
நிலையில்லாப் பொய்கூட்டை நிச்சயங் கொண்டாசை
வலையில் அகப் பட்டுஉழன்று வாடித் திரிகிறண்டி
5
  
தன்னைஅறி யாமல் தலமெட்டுங் காணாமல்
அன்னை அன்னை என்று அலறித் திரிகிறண்டி
6
  
தவநிலையில் தேறாமல் உன்னை உணராமல்
பவநிலையில் புக்கி அகப் பட்டுஉழன்று வாடுறண்டி.
7