பொல்லாக் கொலையும் புலைஅவா விட்டு உன்றன் வல்லபதம் காண மயங்கித் திரிகிறண்டி. | 8 |
| |
துன்பமெல்லாம் போக்கிச் சுகானந்த மானநின்தாள் இன்பம் அனுபவிக்க ஏங்கித் தவிக்கிறண்டி. | 9 |
| |
வஞ்சகம்பொய் சூதுகொலை மானார் மயக்கமெனும் சஞ்சலதை நீங்கித் தனித்திருக்கத் தேடுறண்டி. | 10 |
| |
ஆசைப் பெருக்காறதில்வீழாது உன்பந்த பூசைப் புரியப் புலம்பித் தவிக்கிறண்டி | 11 |
| |
ஊணுறக்கம் இன்பதுன்பத் துஉற்றவினை யைஒழித்துக் காணுதற்கு எட்டாப்பொருளைக் கண்டு மகிழ்ந்தனடி | 12 |
| |
பஞ்சபூதாதிப் பகுப்புகள்பொய் யென்றுணர்ந்துன் செஞ்சரணக் கஞ்சம் அதைத் தேடி அலைகிறண்டி | 13 |
| |
ஆசை ஒழிந்தும் அருள்ஞானம் கண்டு அறிந்தும் பேசத் தெரியாமல் பேய்போல் அலைகிறண்டி. | 14 |
| |
ஆங்காரம் விட்டு அருள்வெளியைக் கண்டு அடுத்து நீங்காப்பே ரின்ப நிலையறித் தேடுறண்டி? | 15 |
| |
சருவம் பிரமம் எனத் தான்தெரியுந் தன்மை மருமம் கா ணாமல் மயங்கித் திரிக்கிறண்டி. | 16 |
| |
ஐங்காயக் கோட்டை அதுமெய்யென்று உன்பாத பங்கயம்போற் றாமல் பரிதவித்து நிற்குறண்டி. | 17 |
| |
பச்சைப்பாண் டத்தைப் போலநாள் இருக்குமென நிச்சயமாய் எண்ணி நிலைதவறி வாடுறண்டி. | 18 |
| |
நீரிற் குமிழியைப்போல் நில்லா உடம்பினைவி சாரிக்கப் பொய் என்றே தானறிந்து வாடுறண்டி. | 19 |
| |
நானென்ற கர்வம் நசித்ததனைச் சுட்டறுத்துத் தான் என்ற அமிர்மந் தனைஅறிய வேண்டுறண்டி. | 20 |
| |
யோகந் தெரிந்ததன்றன் னுண்மை யறிவதற்குப் பாகமுண ராமற் பதறி யலைகுறண்டி. | 21 |