பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்537


வேதமுஞ் சாத்திரமும் வேண்டும் பலசமயம்
பேதமும் காணாப் பெருஞ்சமயம்                  நாதத்தில்

4
  
ஓசை அடங்க ஒளியம் பரமனையில்
ஆசை அடங்க அனுபவிப்போன்                  பூசைபுரி

5
  
தொண்டர் இதயச் சுனைமடலில் வேரூன்றி
விண்ட நறைக்கமல மெல்லடியான்                எண்டிக்கும்

6
  
சாதியான் தோன்றும் சமரச மாயிருந்து
பேதியான் வஞ்சம் இலாப் பேதமையான்               ஆதி

7
  
முதலாய் நடுவாய் முடிவாய் முடிந்து
சிதலாய் வெளியொளியாஞ் சென்மம்               சதகோடி

8
  
சத்தியும் மந்திரமும் தானாகப் பாவித்து
முத்தி கொடுக்கும் முழுமுதல்வன்                   சுத்திய

9
  
செஞ்சடையான் யோகநிலை தேர்ந்து தனைக்குறியார்
நெஞ்சடையான் பிஞ்சு நிலாச்சுடையான்           நஞ்சார்ந்த

10
  
கண்டத்தான் தேடரிய காட்சியான் பல்கோடி
அண்டத்தான் சோதி அருவுருவான்           முண்டகச்செம்

11
  
போதம் கடலும் பொருப்பும் விருப்பாகிச்
சூதுபுரி மூன்று தொழிலுடையோன்                   ஓதும்

12
  
சரியை கிரியை தவயோக ஞானம்
தெரிய அமைத்த சிவசித்தன்                    துரியத்தில்

13
  
தோத்தி அணுவாய்த் துகழாய்ச் சுடரொளியாய்த்
தேத்தியுரு வாகவந்து சென்மிப்போன்              சாத்தரிய

14
  
முக்குணமும் ஐம்பொறியும் மும்மலமு முண்டாகி
எக்குணமுந் தானாய் இருந்தருள்வோன்           அக்கரமாம்

15
  
அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோ அட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் எங்கும் பிரணவமாய்க்             கொஞ்சப்

16
  
பொருளாய் மருளாய்ப் புரையாய் உரையாய்
அருளாய்ந் தனியிருந்த ஆனந்தன்                இருளாத

17