காட்சியான் கண்டவர்க்குக் காணாத பேர்க்குருவும் சூட்சியாய் நின்ற தொழிலாளி ஆட்சி | 18 |
| |
இடைபிங் கலைசுழியினை எட்டாமல் மூலக் கடையில் நடக்கும் கடலுடையோன் விடையேறும் | 19 |
| |
பாசன் குடிலைப் பராசத்தி வீட்டிலுறை ஏகன் பிறப்புறப்பு ஒன்று இல்லாதான் யோகன் | 20 |
| |
சிறியன் பெரியன் சிவப்பன் கறுப்பன் குறியன் நெடியன் எனக் கூறாதான் பொறிகலந்த | 21 |
| |
பாசத்தான் பாசக் கட்டை அறுத்தவர்க்கு மாசத்தான் சோதிமணி மண்டத்தான் நேசத்தான் | 22 |
| |
பொய்யர்க்குப் பொய்யன் பொருந்தி யுளந்தோறும் மெய்யர்க்கு மெய்யாய் வெளிநின்றோன் ஐயன் | 23 |
| |
உருவும் அருவும் ஒளியும் வெளியும் கருவும் கடந்த கன மாயன் குருவாகித் | 24 |
| |
தோத்திப் பழவடியார் சூழ்வினையை நீக்கியுரு மாத்தித் தனது வசம் ஆக்கியே சாத்தரிய | 25 |
| |
மானிடச் சட்டை வடிவெடுத்த மாயோகி யானிடப முந்தும் அருள் ஆனந்தன் தேனடர்ந்த | 26 |
| |
செங்கமலத் தோற்கரிய தேவன் அடியவர்கள் அங்கலமத் தேயுறையும் ஆனந்தன் எங்கள் குரு | 27 |
| |
நேசிக்கும் அன்பர்துயர் நீக்கி நிலைபெறவே யாசிக்கு மெங்கள்குரு ஆனந்தன் பூசிக்கும் | 28 |
| |
பொன்மலைக்கும் வெள்ளிப் பொருப்புக்கும் பொற்புடைய கன்மலைக்குந் தானே கடவுளாய் பன்மலைக்கும் | 29 |
| |
எட்டாய்ச் சிகரம் எழுத்துக் கொழுந்தோட மட்டான ஓங்கார வன்மலையான் கட்டாகத் | 30 |
| |
தேடும் அடியார்கள் சின்னம் துகளறவே ஆடுஞ் சிவகருணை ஆற்றினான் நாடுதவம் | 31 |