பண்ணும் அடியார் பழவினைபோய்ப் பாதமலர் நண்ணும் மொழியிற் பேரின்பம் நாட்டினான் எண்ணும்நிறை | 32 |
| |
கற்புடையான் என்னக் கலங்காத நெஞ்சுகொண்ட பொற்புடைய காயா புரிநகரான் அற்பவிசை | 33 |
| |
வண்டு தொடாமல் மதுஒழுகி வாய்ந்தாறைக் கொண்டு மணத்த குண்மலையான் துண்டத் | 34 |
| |
துரமே கரமாய் ஒருநாளும் ஓயாச் சரமே முழங்கும் தவத்தோன் கரமெடுக்கும் | 35 |
| |
தொண்டர் பலபகையைச் சூறைகொள வேணும் எனக் கொண்டதவ வேடக் கொடியினான் சண்டமிகும் | 37 |
| |
சமையப் பகைதுடைத்துச் சாதிமுறை எல்லாம் குமைய மிதித்துக் குளப்பி அமையாத | 38 |
| |
ஆணவத்தை வேரோடு அறுத்து விழுத்தாட்டி நாணமுற்ற பாகம் நறுக்கியே காணத் | 39 |
| |
துடர்ந்த கிளைநிகழச் சூரைபட வீசி அடர்ந்தமக வாகைக்கு அடங்காப் படர்ந்ததெரு | 40 |
| |
வீதியும் அம்பலமும் மிக்கதொரு சாதிகட்குப் பூதிப் பொடி அணிந்து பொய்மிதித்துக் காதிச் | 41 |
| |
சினக்குறும்பை வாரிச் சிதறித் திரட்டி மனக்குறும்பைப் பற்றி வனைத்து உனக்கென்கென் | 42 |
| |
ஓது குறும்பை உழக்கி எமராசன் தூதனைப் பாய்ந்து துரத்தியே தாதுசெறி | 43 |
| |
அஞ்ஞான மோகம் அறுக்கு அனுபோக மெய்ஞ்ஞான மோனமத வேளத்தான் பைநாகம் | 44 |
| |
நெட்டுடலை மாறி நெருக்கிப் பரிபடுத்திக் கட்டும் இசைக்கும் கடிவாளந் தொட்டுத் | 45 |
| |
திசைவாயு என்னுஞ் சின்னூல் அகப்பட்டுக் குசையால் இறுக்கிக் குணப்படுத்தி அசையா | 46 |