மனம் என்னுங் கல்லணையை வைத்திறுக்கி வாய்ந்த சினமென்னும் அங்கவடி சேர்த்துக் கனமான | 47 |
| |
நாகபந்தஞ் சாரி நடைதுலுக்குத் தூவான மாகமுற விட்டுள் ளடக்கியே சோகப் | 48 |
| |
புரியட்ட காயப் பொருப்பைத் தகர்த்துச் சரியுட்ட ஐம்பொறியைத் தாண்டித் துரியத்தில் | 49 |
| |
ஓடிவிந்து நாதமெனும் உட்கோட்டை யும்கூத்து வாடியிடும் நாடி வரம்பு அழித்து ஆடியிடும் | 50 |
| |
தொண்டுபுரி அன்பர் தொடநரகில் வீழாமல் மண்டுசினம் கொண்டெழுந்த வாசியான் கண்டுதொழும் | 51 |
| |
தன்னாணை தானே தனக்காணை யாவதன்றிப் பின்னாணை இல்லாத பெற்றியான் எந்நாளும் | 52 |
| |
மாறாத கீர்த்திமது மாலையான் வாய்திறந்து சீறாத மோனச் சிவயோகி நேராக | 53 |
| |
ஆண்டகுரு சிற்றம் பலவன் அடிஅருளும் வேண்டி வளர்த்த இருபதத்தான் பூண்டசிவ | 54 |
| |
வேடத்தான் ஓங்கி விளங்கும் செழுங்கமல பீடத்தான் ஞானப் பிரகாசன் ஆடில் | 55 |
| |
பரியான் உரியான் பசியான் பொசியான் பெரியான் அரியான்பேர் இல்லான் துரியா | 56 |
| |
தீதம் கடந்து திகழம் பரங்கடந்து போதம் கடந்துநின்ற பொற்பதத்தான் சீதம் | 57 |
| |
கருணை ஆனந்தமுனி கண்டுதொழ வந்த வருணன் ஆனந்த மழைமேகம் அருணப் | 58 |
| |
பிரகாசம் கொண்டுநின்ற பேரொளிபோல் மாயைப் பிரகாசம் மாற்றும் பெருமையான் இறவாத | 59 |
| |
மெய்ப்பொருளைக் காட்டி விரும்பும் அடியாரைக் கைபொருளாய்க் கொண்ட கருணையான் துய்க்கும் | 60 |