உடல்பொருள் ஆவி யுதகத்தாற் கொண்டு சடவினையை மாற்றும் சமனன் இடைபிங் | 61 |
| |
கலைசுழினைக்கு எட்டாத காட்சியான் காமம் கொலை களவு தீர்த்தகு டோரி அலையாமல் | 62 |
| |
ஆட்கொண்ட சித்தம் பலவ அடிக்கமலத் தாட்கொண்ட தொண்டர்தனக்கு அடியேன் ஆட்கொண்ட | 63 |
| |
தூர்த்தன் இவ னென்பர் சொல்லத் துயருழைந்து பார்த்தவிடம் எல்லாம் பகையாகி வேர்த்துக் | 64 |
| |
கலங்கி விதிவிதித்துக் கண்ணீர்ஒழுக மலங்கிக் குருநாட்டில் வந்தேன் துலங்குமெனக் | 65 |
| |
காயா புரிநகரைக் கண்ணுற்றேன் அவ் ஊரில் போய் ஆதரித்துப் பொருந்தினேன் மாயாத | 66 |
| |
மாது சிவானந்த வல்லி எனப் பேரிட்டாள் ஓதுதிரி கோணவல்லி யூதார் ஆதரவாய் | 67 |
| |
கொஞ்சி வளர்த்த குடிலை மகள்தனையே மிஞ்சுசிலம் பத்தொழிற்கு விட்டாளே ரஞ்சிதமாய் | 68 |
| |
கால்மாறி யாடக் கலாதி கரணவித மேல்மாறிச் சுத்தி விளையாட நூல்மாறிக் | 69 |
| |
கைலாகு பாயக் கலந்து பலசமய மெய்லாகு தாவிஅதன் மேல்மிதிக்கப் பையப் | 70 |
| |
பரதத் தொழிலும் பலகோடி வேத கரதத் தொழிலும் தொகுத்து விரதவுரை | 71 |
| |
தென்னூல் வடநூலைத் தேர்ந்து பலகோடி முந்நூனூறுந் தானே மொழிந்திட்டாள் இந்நிலத்தில் | 72 |
| |
ஆடப் பதுமைதனை ஆட்டிவிக்க அப்பதுமை பாடத் தொழிலும் பலகற்றாள் நாடறிந்த | 73 |
| |
வம்பி திரிகோண வல்லி வடகிரியைக் கெம்பீரம் எல்லாங் கிரிகித்தேன் அம்புவியில் | 74 |